Chennai

News September 22, 2024

சென்னையில் இன்று கூடுதல் பேருந்து வசதி

image

சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகளின் நலன் கருதி தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News September 22, 2024

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

image

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையும், அதேபோன்று, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 22, 2024

கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி அறிவுரை

image

பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வாரத்திற்கு ஒரு முறையாவது மலர் குவளைகளில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். சிறிய செயல்கள் பெரிய பிரச்சனைகளைத் தடுக்கலாம். விழிப்புடன் இருப்போம், கொசுக்களால் பரவும் நோய்களை எதிர்த்து போராடுவோம் என பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News September 22, 2024

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 5 பேரை நிரந்தர நீதிபதியாக குடியரசுத் தலைவர் செப். 20ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று மும்பை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் அவர்களை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு உத்தரவிட்டுள்ளார்.

News September 21, 2024

நெக்ஸஸ் விஜயா மாலில் விஜய் ஆண்டனி

image

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. இதில் நடிகர், விஜய் ஆண்டனி, ரியா சுமன், சரண்ராஜ், ஐஸ்வர்யா தத்தா, கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பங்கேற்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News September 21, 2024

சென்னை வந்த ஆம்னி பேருந்தில் 2 கோடி பணம் பறிமுதல்

image

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் தமிழ்நாடு – ஆந்திரா எல்லை எனாவூர் சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, பேருந்தில் இருந்த பார்சலில் ரூ.2.15 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்சலை அனுப்பிய சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரை வரவழைத்து வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News September 21, 2024

நாளை புறநகர் ரயில் சேவை ரத்து

image

நாளை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான புறநகர் இரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, ஸ்பெஷல் பாசஞ்சர் ரயில்கள், சென்னை கடற்கரை – பல்லாரம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த ஸ்பெஷல் பாசஞர் ரயில்களுக்கான அட்டவணை மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. இந்த செய்தியை SHARE செய்யவும்.

News September 21, 2024

செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும்

image

சென்னை மெட்ரோ வாட்டர் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். 3,582 சாலைகளில், செப்டம்பர் நடுப்பகுதிக்குள் 2,100 சாலைகளில் மெட்ரோவாட்டர் குழாய் பதித்துள்ளது. 330 சாலைகளின் பணிகள் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். மீதமுள்ளவை ஜனவரியில் முடிக்கப்படும். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக 4,100 கிமீ கழிவுநீர் பாதைகள் தூர்வாரப்படுள்ளன என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

News September 21, 2024

அம்பேத்கர் சட்டப் பல்கலை. 14ஆவது பட்டமளிப்பு விழா

image

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யின் 14ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29ஆம் தேதி பெருங்குடி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2024 மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டத் தேர்வில் சட்டப் படிப்பை முடித்தவர்கள், மேலும் இதுவரை பட்டமளிப்புக்கு விண்ணப்பிக்காதவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 27ஆம் தேதிக்கு முன்பே www.tndalu.ac.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.

News September 21, 2024

கூட்டு பாலியல் வழக்கில் 3 பேருக்கு புழல் சிறை

image

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் புழல் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளனர். தாம்பரத்தை எடுத்த தாழம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!