India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டியில் ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு 1945ஆம் ஆண்டு முதல் 99 ஆண்டு காலத்திற்கு அரசிடம் இருந்து குத்தகை வழங்கப்பட்டிருந்தது. இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குத்தகை ரத்து செய்யப்பட்டு 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமை வெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் என்னை வாழ்த்தத் தவறாதவர் எஸ்றா சற்குணம். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர், சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீசிங் ராஜாவை, கடப்பாவில் வைத்து நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை அழைத்து வந்தபோது நீலாங்கரை அருகில் தப்பி செல்ல முயன்றதால் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இது 2ஆவது என்கவுன்ட்டர் ஆகும்.
பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து சைபர் கிரைம் மோசடி முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் டிபி யில் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார். பாகிஸ்தான் ஸ்கேமர்ஸ் என்று சொல்லக்கூடிய மர்ம நபர்கள் சென்னையில் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக புகார் அளிந்துள்ளது.
ஆந்திராவில் இறால் ஏற்றுமதி அதிகளவில் நடப்பது போல் தமிழக மீனவர்களும் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கட்சியில் புதிதாக உறுப்பினர் அட்டை வழங்கிய பின் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறினார்.
சென்னை இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் இன்று காலமானார். 86 வயதான இவர் உடல்நல குறைவால் பாதிப்படைந்து இருந்தது குறிப்பிடதக்கது. அவரது உடல், கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். போலிசார் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி செப்., 30, அக்., 1 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜேக் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை அமைச்சருடன் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உரையாடல் நடத்தினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கேன்சர் என்பது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு நோய் மட்டும் தான். அதனை விரைவில் குணப்படுத்திடலாம். எனவே, அதை நினைத்து நீங்கள் வருத்தப்பட தேவையில்லை என அறிவுரை வழங்கினார்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் ரூ.1 கோடிக்கான நிதி பத்திரங்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிதி நிறுவன மோசடியில் தேவநாதன் உட்பட 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிதி நிறுவன மோசடி தொடர்பாக 4,100 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெருநாய்கள் கணக்கெடுப்பு ஜூன் மாதம் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.8 லட்சம் தெருநாய்கள் சுற்றித் திரிவது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், அம்பத்தூா் மண்டலத்தில் அதிக பட்சமாக 23,980 நாய்கள், ஆலந்தூரில் குறைந்த பட்சமாக 4,875 நாய்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.