Chennai

News September 23, 2024

கோயம்பேட்டிலும் பூங்கா தேவை அன்புமணி வலியுறுத்தல்

image

கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட நிலத்தில், 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், “கோயம்பேட்டில் 66.4 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2ஆவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News September 23, 2024

சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள்

image

சென்னையில் நெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நாய்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 23,980 நாய்களும், குறைந்தபட்சமாக ஆலந்தூரில் 4,875 நாய்களும் உள்ளன.

News September 23, 2024

“குழந்தைகளை பள்ளிக்கு மட்டும் அனுப்பி வையுங்கள்”

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை சொல்வதை செய்கின்ற இயக்கம். தற்போது உங்களுக்கு வீடு வழங்கப்பட்டிருக்கிறது. இனி நீங்கள் உங்கள் வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம். இனிமேல், எல்லாம் எளிமையாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் முன்னேறி செல்லலாம். உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள். பள்ளிக்கு மட்டும் அனுப்பி வையுங்கள்” என்று தெரிவித்தார்.

News September 23, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புதூர் அப்புவிடம், ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் கைது செய்யப்பட்ட அப்பு, இன்று காலை ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்ய கூறியது யார், நிதி வழங்கியது யார், எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News September 23, 2024

பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

image

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், ரூ.17.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்பு கிடங்கு வளாகம், 58 நேரடி நெல் கொள்முதல் புதிய கட்டடங்களைத் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.

News September 23, 2024

பராமரிப்பு பணி காரணமாக இரவு நேர ரயில்கள் ரத்து

image

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை (செப்.24) இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் புறப்பட்டு, தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 23, 2024

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 190ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 23, 2024

கமிஷனர் பொறுப்பேற்ற பின் 3ஆவது என்கவுன்ட்டர்

image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட‌ திருவேங்கடம் கடந்த ஜூலை 14ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பின், செப்.18ஆம் தேதி காக்காத் தோப்பு பாலாஜி வியாசர்பாடியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இன்று, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா நீலாங்கரையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

News September 23, 2024

பசுமைவெளி மற்றும் பூங்காவாக மாறும் ரேஸ் கிளப்

image

கிண்டியில் ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு 1945ஆம் ஆண்டு முதல் 99 ஆண்டு காலத்திற்கு அரசிடம் இருந்து குத்தகை வழங்கப்பட்டிருந்தது. இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குத்தகை ரத்து செய்யப்பட்டு 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமை வெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

News September 23, 2024

எஸ்றா சற்குணம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

சென்னை இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் என்னை வாழ்த்தத் தவறாதவர் எஸ்றா சற்குணம். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர், சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!