India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கைதின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி சி.டி.மணி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது. இதனையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய சி.டி.மணி சேலத்தில் கைது செய்யப்பட்டார். 15 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கூறி நீலாங்கரை போலீசார் அவர் வழக்குபதிவு செய்துள்ளனர். காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி சி.டி.மணி என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக இருந்த 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி மற்றும் திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவில் 1 இடத்திலும் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை, வெட்டுவாங்கேனி குறுக்கு தெருவில் முகமது ரியாஸ் என்பவர் வீட்டில் NIA அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் 3 இடங்களிலும், பெரும்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்ததும், தகவல்கள் தெரிவிக்கப்படும்.
சென்னை மெரினா கடற்கரையைச் சுற்றி பார்க்க வந்த வடமாநில தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது தில்சாத்(30), தனது நண்பர்களுடன் நேற்று மாலை கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் உருவான ராட்சத அலையால், அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரபல திரைப்பட இயக்குநர் மோகன்.ஜியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வழக்கு? எதற்காக அழைத்து செல்கின்றனர்? என்ற எந்த விவரங்களும் தெரிவிக்கவில்லை என மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தகவல்கள் கிடைத்ததும் விரைவில் தெரிவிக்கப்படும்.
சென்னையில் அனுமதி இன்றி ‘நோ பார்க்கிங்’ (NO PARKING) அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. வாகனங்கள் நிறுத்தும் தொடர்பான பலகைகள் வைப்பதற்கு முன், போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பாக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம், 30.5% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. அன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலி பகுதியில் 14.49செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரவாயல், வானகரத்தில் 8 செ.மீ. மழை பதிவானது. வளசரவாக்கம் பகுதியில் 7 செ.மீ. மழை பதிவானது. இதுதவிர தாம்பரம், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்தது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னை பெருநகரில் 165 இடங்களில் தானியங்கி ஏ ஐ (AI) தொழில்நுட்பத்துடன் ATCS சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது அதற்கான சோதனை இன்று நடைபெற்றது.
சென்னை பெருநகரில் போக்குவரத்து கட்டுப்படுத்த சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் சுதாகர் தலைமையில் சென்னையில் 165 தானியங்கி சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது..
சென்னை கிண்டி ரேஸ் கிளப்-ஐ பசுமைப் பூங்காவாக மாற்றத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும். இதனால் நீர் பற்றாக் குறையை தவிர்க்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.