Chennai

News September 24, 2024

சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தடை

image

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் வந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ நிலையம் உள்ள பார்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து வருமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

News September 24, 2024

புதூர் அப்பு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்பு பிற்பகலில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

News September 24, 2024

தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லையா: ஜெயக்குமார் கேள்வி

image

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதியை விட தகுதியானவர்கள் வேறு
யாரும் திமுகவில் இல்லையா? கட்சிக்காக மாடாக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்கலாமே? என திமுகவினருக்கு கேள்வி எழுப்பினார்.

News September 24, 2024

சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும்: தமிழிசை

image

சென்னையில் இன்று செய்தியாளர்களை சத்தித்த பாஜகவை சார்ந்த தமிழிசை சௌந்தர ராஜன், “ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெற்று வருகின்றனர், அதற்கு அடித்தளமிட்டவர் ஐயா சிவந்தி ஆதித்தனார். அவருக்கு சென்னையில் ஒரு சிலை வேண்டும் என்பது நியாமான கோரிக்கை” என்றார்.

News September 24, 2024

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

News September 24, 2024

அமைச்சர் வெளியிட்டதே வெள்ளை அறிக்கை தான்: முதல்வர்

image

சென்னை கொளத்தூரில், முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையே, வெள்ளை அறிக்கைதான்” என வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி கேட்பது குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதில், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News September 24, 2024

சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

image

அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதிமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மற்றவருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 24, 2024

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் ஆறுதல்

image

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனின் மாமனார் கே.உமாசங்கர்(68), உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின், “செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குமரகுருபரனின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.

News September 24, 2024

ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிந்தது

image

கைதின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி சி.டி.மணி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது. இதனையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய சி.டி.மணி சேலத்தில் கைது செய்யப்பட்டார். 15 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கூறி நீலாங்கரை போலீசார் அவர் வழக்குபதிவு செய்துள்ளனர். காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி சி.டி.மணி என்பது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2024

5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

image

2023ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக இருந்த 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி மற்றும் திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

error: Content is protected !!