Chennai

News September 25, 2024

பல்வேறு இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், இன்று மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மிர்சாஹிப்பேட்டை பகுதியில் பல் மருத்துவ முகாமும், கொண்டித்தோப்பு பகுதியில் எலும்பியல் மருத்துவ முகாமும், இ.சி.ஆர் பகுதிகளில் பிசியோதெரபி மருத்துவ முகாம்கள் ஆகியவை இன்று மாலை 4.30 முதல் இரவு 8:30 வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் பண்ணுங்க

News September 25, 2024

குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி செலுத்த அறிவுரை

image

இந்த அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த வரும் 30ஆம் தேதி தான் கடைசி தேதி என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகங்கள், வசூல் மையங்கள் ஆகியவை அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயங்கும். வலைதளத்தில் டெபிட் கார்டு, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

News September 25, 2024

ஆலந்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வரும் 27ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பங்கேற்பவர்கள், தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News September 25, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (செப்.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவண்ணாரப்பேட்டை, டெர்மினல் சாலை, டி.எச்.சாலை, திடீர் நகர், செரியன் நகர், நாகூரன் தோட்டம், துறைமுகம், மங்கலம் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு, கோயம்பேடு, ஸ்ரீநிவாசா நகர், கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், வில்லிவாக்கம், சிட்கோ நகர், நெற்குன்றம், தொழிற்பேட்டை, பாபா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News September 25, 2024

சென்னை அருகே அமைய இருக்கின்ற 10 வழிச்சாலை திட்டம்

image

இந்தியாவில் மிகப்பெரிய கட்டமைப்பில் ஒன்றான சாலை வசதியானது சென்னை புறநகர் பகுதியில் 10 வழிச்சாலையாக அமைய இருக்கிறது. இந்த சாலை எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து தச்சூர் திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில், மாமல்லபுரம் பூஞ்சேரி வரை இந்த சாலை கட்டமைக்கப்பட இருக்கிறது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ. 2673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News September 25, 2024

சென்னையில் ஹேக்கத்தான் போட்டிகள் பரிசளிப்பு விழா!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாவட்டம் தோறும் ‘தமிழ்நாடு நிரல் திருவிழா’ எனும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 50 சிறந்த படைப்புகளைத் தந்த இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (செப்.24) நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, இளைஞர்களின் படைப்புகளை நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.

News September 24, 2024

கிண்டி மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று

image

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய பசுமை கட்டடக் கவுன்சில் தலைவர் அஜித் குமார் ஜோர்டியா, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஏ.வ.வேலுவை சந்தித்து, தங்க தரச் சான்று மற்றும் பதக்கத்தை வழங்கினார். அரசு மருத்துவமனைகளில், பசுமை கட்டிடமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் இதுவாகும் எனக்கு கூறினார்.

News September 24, 2024

சீசிங் ராஜாவின் உடல் தகனம்

image

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் உடல் சிட்லபாக்கம் மாநகராட்சியில் உள்ள தகன மேடையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமுறைவாக இருந்த ரவுடி சிசிங் ராஜா சமீபத்தில் போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டார்.

News September 24, 2024

அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் விரைவில்

image

சென்னையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 01-10-2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக மாளிகையில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 24, 2024

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமனம்

image

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ். அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ். கார்த்திகேயன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!