Chennai

News September 25, 2024

சென்னையில் போதை பொருள் ஒழிப்பு ரோந்து படை அமைப்பு

image

சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு ரோந்து படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே போதை பொருள் விற்றோரின் தகவல்களை சேகரித்து இனி அவர்கள் விற்காமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News September 25, 2024

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தாமதம்

image

சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டம், மத்திய அரசு “மாநிலத் திட்டம்” என்று நியமித்ததால், நிதி நெருக்கடிக்கு வழிவகுத்ததால், தாமதம் ஏற்படுகிறது. இதுவரை இத்திட்டத்திற்கு முழு நிதியுதவி அளித்த தமிழக அரசு, கடந்த ஆண்டு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.9,000 கோடியாக குறைத்து, பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ஒதுக்கினாலும், இந்த ஆண்டு ரூ.8,000 கோடி மட்டுமே செலவிட திட்டமிட்டுள்ளது.

News September 25, 2024

கால்வாயில் குப்பை கொட்டுவது ட்ரோன் மூலம் கண்காணிப்பு

image

சென்னை மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் கால்வாய்களில் கொட்டப்படும் கழிவுகள் கால்வாய்களில் அடிக்கடி அடைப்பை ஏற்படுத்துகிறது. அடிக்கடி நீர்வழிக் கால்வாய்களில் குப்பை போடுபவர்களை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும், விதிகளை மீறி குப்பை கொட்டுவருக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 25, 2024

லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றி விழா

image

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, இசையமைப்பாளர் சான் ரோல்டன், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், பால சரவணன், டி.எஸ்.கே, காளி வெங்கட், பாலசரவணன், நடிகைகள் சஞ்சன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News September 25, 2024

அதிகாரமா? அலங்காரமா? அகங்காரமா?

image

சென்னை மாநகராட்சியின் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சர்ச்சையை ஏர்படுத்தியது. இதுகுறித்து பேசிய பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன், “தபேதார் மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் மேயரின் அதிகாரமா? தபேதாரின் பெண் உரிமையின் அலங்காரமா? தபேதாரின் அலங்காரத்தை பொறுத்துக் கொள்ளாத மேயரின் அகங்காரமா? சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசின் மற்றொரு சமூக அநீதி இது என” தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

லிப்ஸ்டிக் பூசியதால் இடமாற்றமா? மேயர் அலுவலகம் மறுப்பு

image

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதராக பணியாற்றி வந்த மாதவி, மணலி மண்டலகத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நான் மேயரை போன்று லிப்ஸ்டிக் பூசியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டேன் என்று மாதவி கூறினார். இதற்கு மேயர் அலுவலகம் மறுப்பு தெரிவித்ததோடு, மாதவி குறித்து நேரத்தில் பணிக்கு வராததன் காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

News September 25, 2024

“நானும் பளிச்சென்று லிப்ஸ்டிக் பூசி செல்வேன்”

image

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக பணி புரிந்த மாதவி, மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மேயர் பிரியாவை போன்று லிப்ஸ்டிக் பூசியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாதவி கூறியுள்ளார். இந்நிலையில் நானும் மாநகராட்சி கூட்டத்திற்கு செல்லும்போது பளிச்சென்று லிப்ஸ்டிக் பூசி செல்வேன் என மாம்பலம் 134ஆவது வார்டு கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

மெரினாவில் கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்

image

இந்திய விமானப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, விமானப்படை தின தேசிய சாகச நிகழ்ச்சி வரும் அக்.6ஆம் தேதி மெரினாவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இந்நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடி வருகை தர உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News September 25, 2024

உயரிய ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்

image

விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, செல்வி மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை இன்று வழங்கி வாழ்த்தினர்.

News September 25, 2024

புதிய ஆலையை அமைக்கிறது பாஸ்கான் நிறுவனம்

image

சென்னை அடுத்த ஒரகடத்தில், பாஸ்கான் நிறுவனம் விரைவில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான புதிய ஆலையை தொடங்க உள்ளது. ஏற்கனவே உள்ள பாஸ்கான் அருகிலேயே, 5 லட்சம் சதுர அடி நிலத்தை தேர்வு செய்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாஸ்கானின் புதிய ஆலை இந்திய எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்திக்கு புதிய மைல்கல்லாக அமையும் என பாஸ்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!