India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 9 கேரட் தங்கம் தேவை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 கேரட் நகையில் தங்கத்தின் அளவு 37.5% மட்டுமே இருக்கும். அதில் 42.5% வெள்ளியும், 20% செம்பும் கலக்கப்படுகின்றன. இதனால் நகையின் விலை கனிசமாக குறையும். குறிப்பாக 22 கேரட் தங்க நகை ரூ.55,000க்கு விற்கப்பட்டால், 9 கேரட் தங்க நகை ரூ.22,000 மட்டுமே விற்பனையாகும் என கூறப்படுகிறது.
தென் சென்னையில் பணியாற்றிய போது ரூ.10 கோடி மதிப்பு நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் மாற்றியதாக வழக்கு பதிவு செய்து, பத்திரப்பதிவுத்துறை சேலம் டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார், ரவீந்திரநாத்தை இன்று புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்க கோரி ஒன்றிய அரசிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம். திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் அறிக்கைகளுடன் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் குழு விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் எந்தவொரு சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்க வில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான வரும் ஜனவரி 24ஆம் தேதி சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது, சான்றிதழ், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தோர் awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக, அம்பத்தூரில் 13.4 செ.மீ., வானகரத்தில் 12.66 செ.மீ., மலர் காலனி 12.3 செ.மீ., மணலி, திரு.வி.நகர் பகுதிகளில் 9 செ.மீ., அண்ணா நகர், கதிவாக்கம், கொளத்தூர், கோடம்பாக்கம் பகுதிகளில் 8 செ.மீ., ராயபுரம், புழல், திருவொற்றியூர் பகுதிகளில் 7 செ.மீ., மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் பகுதிகளில் 6 செ.மீ. பதிவாகியுள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து, ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு, தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு. முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், National ஹெஅழ்த் Insurance Scheme (NHIS) நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இம்மருத்துவமனையில் இலவச சிகிச்சையினை பெறும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துவங்கி வைத்தார்.
சென்னை கொடுங்கையூரில் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சமீபத்தில் ஆரோக்கியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பாலியல் தொல்லை அளித்த ஆரோக்கியசாமிக்கு ஐந்தாண்டு சிறை மற்றும் ரூ.10,000 விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் புதிய தாழ்தள நவீன 10 பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை பகுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் பங்கேற்று பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் திமுக நிர்வாகிகள் நடராசன், நேதாஜி யு கணேசன், லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.