India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தகை ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடந்து வருவதால் அவமதிப்பு வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ரவீந்திரன் கூறியுள்ளார்.
ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் (86), செப்.22ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதையடுத்து, சென்னை வானகரத்தில் நடைபெற்ற இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்படி பா.ம.க. வலியுறுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமனி, திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக புள்ளிவிவரங்கள் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடு விவரங்கள் குறித்து முதல்வர் தெரிவித்தது உண்மை என்றால் அவர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடப்பு நிதி ஆண்டில் தி.நகர், அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர், ஆவடி, பாடியநல்லுார், தங்கசாலை வள்ளலார் நகர் ஆகிய பேருந்து நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தலா, ரூ.10 கோடி வீதம் மொத்தம், ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் ஒப்புதலை அடுத்து, இதற்கான வடிவமைப்பு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணியால் சேதம் அடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய பணிகளின் நிலை குறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 25 இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணமாக மழை நீர் வடிகால் கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. அனைத்து பணிகளையும் செப்டம்பர் 30க்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை, இடி மின்னல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 13 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட கூடிய 20 விமானங்கள், நேற்று இரவு ஸ்ரீலங்கா புறப்பட வேண்டிய 2 விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை அம்பத்தூர் மற்றும் வானகரத்தில் 13 சென்டிமீட்டரும், மலர் காலணியில் 12 சென்டிமீட்டர் என்ற அளவிலும் மிக கன மழை பெய்துள்ளது. மேலும், மணலி மற்றும் அம்பத்தூரில் 10 சென்டிமீட்டரும், கேகே நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், கொளத்தூர் கோடம்பாக்கம், புழலில் 8 சென்டிமீட்டர் மழையும். ராயபுரம், திருவொற்றியூர், ஐஸ் ஹவுஸ், மாதவரம், ஆலந்தூரில் 7 சென்டிமீட்டரும் பதிவாகியுள்ளது.
எண்ணுார் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு தனி நிறுவனத்தை சி.எம்.டி.ஏ., உருவாக்கியது. இந்நிறுவனத்தில் தலைமை நிதி ஆலோசகர், தலைமை செயல்பாட்டு அலுவலர், நிறுவன செயலர், நகரமைப்பு வல்லுனர் உள்ளிட்ட 7 வகை இடங்களுக்கு வல்லுனர்களை தேடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்’ என, சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள பேட்மிட்டன், டென்னிஸ் அரங்குகள் நீச்சல் குளம் வழக்கம் போல் இயங்கும். பார்ட்டி ஹால் மதுக்கூடம், உணவகம் உள்ளிட்டவை அடங்கிய சுமார் 10 ஏக்கர் நிலம் சென்னை ரேஸ் கிளப் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா பசுமை வெளி உருவாக்க 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை மற்றும் மழைபயிர்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 9 கேரட் தங்கம் தேவை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 கேரட் நகையில் தங்கத்தின் அளவு 37.5% மட்டுமே இருக்கும். அதில் 42.5% வெள்ளியும், 20% செம்பும் கலக்கப்படுகின்றன. இதனால் நகையின் விலை கனிசமாக குறையும். குறிப்பாக 22 கேரட் தங்க நகை ரூ.55,000க்கு விற்கப்பட்டால், 9 கேரட் தங்க நகை ரூ.22,000 மட்டுமே விற்பனையாகும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.