Chennai

News September 27, 2024

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் இன்று (செப்.27) அம்பத்தூர், MTH சாலை, சிவானந்தா நகர், MKB நகர், அன்னை சத்யா நகர், வானகரம், ராமாபுரம், KSR நகர், திருவேங்கட நகர், சோழபுரம், கிருஷ்ணாபுரம், பி.வி.நகர், MGR சாலை, விஸ்வநாதபுரம், NGO காலனி, கே.கே.நகர், SBI காலனி, AGS காலனி, பெசன்ட் நகர் அவென்யூ, எக்ஸ்பிரஸ் அவென்யூ, வூட்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, பட்டுலாஸ் சாலை, ஜி.பி.சாலை, உஸ்மான் முல்க் சாலை பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர்

News September 27, 2024

துணை மேயர் தலைமையில் வார்டு சபை கூட்டம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13, வார்டு 169ல், வார்டு சபை கூட்டம் துணை மேயர் மகேஷ் குமார் தலைமையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏரியா சபை உறுப்பினர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின்சார துறை, பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரிய மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 27, 2024

சென்னையில் “ஒரு கிராமத்து திருவிழா “

image

சென்னையில் “ஒரு கிராமத்து திருவிழா” இயற்கை விவசாயம், பூர்வீக கால்நடைகள், பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள் சென்னை YMCA நந்தனம் அரங்கில் இன்று நடைபெற உள்ளது. சென்னையை அதன் வேர்களுடன் இணைத்து, நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவோம் என்ற நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News September 27, 2024

சீமான் செய்தியாளர் சந்திப்பு!

image

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ஒரு செய்தியாளர் ஸ்டாலின் வந்து உறுதியையும் வீரத்தையும் பாராட்டுகிறேன் என்று சொன்னார் அதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சீமான், “திருடுவது, லஞ்சம் வாங்குவது, கூடுதல் விலைக்கு விற்பது போன்றவைகள் தியாகத்தில் வரும் என கிண்டலாக கூறினார்.

News September 26, 2024

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து சீமான் ஆவேசம்

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு, “ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலையை தலையில் போட்டு தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மாட்டு பால் குடிப்பவர்கள் மாட்டுக் கொழுப்பை கீழ்த்தனமாக பார்ப்பது எவ்விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியபடி கருத்து தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

சென்னையில் தவெக ஆலோசனை கூட்டம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டின் முக்கிய செயல்பாடுகள் குறித்து சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News September 26, 2024

செந்தில் பாலாஜிக்கு காலதாமதமாக வழங்கப்பட்ட நீதி

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “வழக்கில் எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலங்கள் சிறையில் இருந்துள்ளார். ஒன்றிய அரசு திட்டமிட்டு தங்கள் கீழ் உள்ள துறைகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டு இதனை செய்துள்ளார்கள். செந்தில் பாலாஜிக்கு காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாக நாங்கள் கருதுகிறோம்” என தெரிவித்தார்.

News September 26, 2024

சற்குணத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொதுச் செயலாளர்

image

உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த பேராயர் சற்குணத்தின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை வானகரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

News September 26, 2024

மாமல்லையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

மாமல்லபுரத்தில் சுற்றுலா சென்று கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த க.கவுதம், சூளை பகுதியைச் சேர்ந்த ப.பிரகாஷ், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ம.ரோஷன் ஆகிய 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை இன்று அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

News September 26, 2024

முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

image

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை” என கூறியுள்ளார்.

error: Content is protected !!