India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து, தற்போது, தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பல்கலை. இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் “அடைப்பு அல்லது பிற சிக்கல்களைப் புகாரளித்து, கனமழையை திறம்பட நிர்வகிப்பதற்கும், மேலும் நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குவதற்கும் எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களை ஈடுபடுத்த ஊக்குவிக்கிறோம்” என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமனி கூறியுள்ளார். குறிப்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாகவும், இதனால் மின் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம், ரிப்பன் வளாக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில், பேரூராட்சி இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6% வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ரிப்பன் கட்டிடத்தில், மாமான்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்டிட இடிபாடுகள் 1 டன் வரை கொட்டினால் ரூ.2000இல் இருந்து ரூ.5000 ஆகவும், பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் ரூ.200இல் இருந்து ரூ.2000-ஆகவும், பொது இடத்தில் திடக்கழிவுகள் எரித்தல் ரூ.1000இல் இருந்து ரூ.5000 ஆகவும், வியாபாரிகள் குப்பை தொட்டி, வைக்கவில்லை என்றால் ரூ.100இல் இருந்து ரூ.1000ஆகவும் உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் வளாக கூட்ட அரங்கில், மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 60 தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 137 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக 63 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களை 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்த தீர்மானம் இயற்றப்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில், மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபன், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். மாநகராட்சி மேம்படுத்துவது குறித்து இன்று ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் சென்னை துறைமுகத்துக்கு சென்று சோதனை நடத்தி, 112 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சைக்கிளில் மின்விளக்கு விளம்பர பதாகை அமைத்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்து துவங்கி வைத்தார். சென்னை புறநகர் மாவட்ட தலைவர் இசிஆர்.பி. சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையில் இன்று (செப்.27) அம்பத்தூர், MTH சாலை, சிவானந்தா நகர், MKB நகர், அன்னை சத்யா நகர், வானகரம், ராமாபுரம், KSR நகர், திருவேங்கட நகர், சோழபுரம், கிருஷ்ணாபுரம், பி.வி.நகர், MGR சாலை, விஸ்வநாதபுரம், NGO காலனி, கே.கே.நகர், SBI காலனி, AGS காலனி, பெசன்ட் நகர் அவென்யூ, எக்ஸ்பிரஸ் அவென்யூ, வூட்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, பட்டுலாஸ் சாலை, ஜி.பி.சாலை, உஸ்மான் முல்க் சாலை பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர்
Sorry, no posts matched your criteria.