Chennai

News September 29, 2024

அண்ணா பல்கலைக்கு 13வது முறை வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று அதிகாலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், 13ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 13ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.

News September 29, 2024

மந்தைவெளியில் கார் மோதி 7 பேர் காயம்

image

சென்னை மந்தைவெளியில் இன்று காலை தாறுமாறாக ஓடிய கார் மோதி 7 பேர் காயமடைந்தனர். சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

News September 29, 2024

முன்னாள் மேயருக்கு அரசு சார்பில் இன்று மரியாதை – change the photo

image

சென்னையின் முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் பிறந்தநாள் நாளை (செப்டம்பர் 29) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, வடசென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 29, 2024

சென்னையில் “தொல்குடி” தேசிய மாநாடு நிகழ்ச்சி

image

சென்னை சமூகப் பணி கல்லூரியில் நேற்று பழங்குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல் தொடர்பாக நடைபெறும் “தொல்குடி” தேசிய மாநாட்டில் நிதித்துறை அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே சந்துரு, ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

News September 29, 2024

செப்.30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

image

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கிய சென்னை மாநகராட்சி,
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் சாலை வெட்டும் பணிகள் மேற்கொள்ளக்கூடாது. சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் வேறு எந்த சேவை துறையாக இருந்தாலும் சாலை வெட்டும் பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

News September 29, 2024

நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 33.5° செல்சியஸ் வெப்பம் பதிவு

image

தமிழகத்தில் இன்று பல்வேறு முக்கிய பகுதிகளில் பதிவான வெப்பநிலை அளவில், சென்னை பகுதிகளில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 33.5° செல்சியசும், மீனம்பாக்கத்தில் 34.1° செல்சியசும் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் சென்னையை மழை குளிர்வித்த நிலையில், நேற்றும் இன்றும் வெயில் வாட்டியது. நாளை எப்படி இருக்கும்? உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க

News September 28, 2024

தவெக தென் சென்னை நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

கிண்டியில் தனியார் மண்டபத்தில் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டில், தென் சென்னை தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து மாநாட்டின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

News September 28, 2024

சென்னை ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணி, ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் இன்று (செப்.28) கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News September 28, 2024

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

image

சென்னையில், பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்கும் உணவகங்கள் மீது அபராதம் மற்றும் சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். தட்டுகளில் வாழை இலை, மந்தார இலை கொண்டே உணவுகளை விநியோகிக்க என்பது உள்பட பல விதிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

சென்னையில் 66 புதிய தாழ்த்தள பேருந்துகள்

image

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 2ஆம் கட்டமாக, 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை – வேளச்சேரி 5 பேருந்துகள், டோல்கேட் – திருவான்மியூர் 8 பேருந்துகள், திருவொற்றியூர் – பூந்தமல்லி 2 பேருந்துகள்.

error: Content is protected !!