India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சி பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய குடிநீர், கழிவுநீர் வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், 2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான வரியை அக்.1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்காக, அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் வசூல் மையங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 197ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் இருந்து காலை 7.50-க்கு புறப்பட்டு, 10.45 மணிக்கு சென்னை வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானமும், காலை 11.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லி சென்றடையும் விஸ்தாரா விமானமும் ரத்து செய்யப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இன்று (செப்.30) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், முகப்பேர் ஏரி, முகப்பேர் கிழக்கு, கலெக்டர் நகர், மாத்தூர் MMDA, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், CPCL நகர், MCG Avenue, அனகாபுதூர், எண்ணூர், கத்திவாக்கம், ஜே.ஜே. நகர், கும்மிடிப்பூண்டி சிப்காட், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விளையாட்டுத் துறையில் இந்தியாவே கண்டிராத மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதை வரவேற்கிறார்கள். இதை குறை சொல்பவர்கள் எரிச்சல் மற்றும் பொறாமை காரணமாக விமர்சனம் செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் ஸ்டாலின் துணை முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடி தமிழ்நாட்டை தொழில் மையமாக கொண்டு வந்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ பதவியேற்றுக் கொண்டாலும் தமிழ்நாட்டில் எந்த முன்னேற்றமும் வரப்போவது கிடையாது. மது இல்லாத மாநிலமாக மாற்றப்போவது கிடையாது” என்றார்.
ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்படி தடையில்லை என்றாலும், அமைச்சராக தகுதி இல்லை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “துறை இல்லாத அமைச்சராக சிறையில் இருந்தபோதே சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும்போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கட்டடக் கழிவுகளைக் கொட்ட, மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டும். கட்டடக் கழிவுகளைக் கொட்ட ஒதுக்கப்பட்ட இடங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டுமெனில் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்த அந்த நபர், குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உரிய முறையில் தடுப்புகள் வைக்கவில்லை என்றும், பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் 10 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பெரம்பூரில் இருந்து அண்ணா சதுக்கம் சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் சிக்கிய ஓட்டுநரை அங்கிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.