Chennai

News October 1, 2024

முதல் அரையாண்டில் ரூ.1,140 கோடி வரி வசூல்

image

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு (ஏப்ரல் – செப்டம்பர்) நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சொத்து வரி ரூ.880 கோடி, தொழில் வரி ரூ.260 கோடி என மொத்தம் ரூ.1,140 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.940 கோடி வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்கள் கடமையை சரிவர செய்துள்ளனர்.

News October 1, 2024

காந்தி மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர்

image

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த தூய்மை பணியின் போது, காந்தி மண்டபத்தில் பல மதுபான காலி பாட்டில்கள் இருந்துள்ளன. அவை அனைத்தையும் அகற்றிய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர், காந்தி மண்டபத்தில் இதுபோன்ற மதுபாட்டில்கள் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

News October 1, 2024

அக்.30க்குள் செலுத்தினால் குடிநீர், கழிவுநீர் வரி 5% தள்ளுபடி

image

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை, அக்.30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உரிய காலக்கட்டத்துக்குள் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக இன்று (அக்.1) முதல் வரும் அக்.30ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன்முறையாக 5% ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 1, 2024

சென்னையில் 6 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை

image

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மெரினா கடற்கரையில் விமான சாகச கண்காட்சி வரும் அக்.6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, பாதுகாப்பை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதியை இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன் மற்றும் பறக்கும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2024

சென்னைக்கு 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க சென்னைக்கு 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல்பாண்டியன், மேக்நாத்ரெட்டி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News October 1, 2024

மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

image

சென்னை மெரினா கடற்கரை இன்று (அக்.1) முதல் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் 6ஆம் தேதி வரை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 1, 2024

சிறந்த நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு

image

பேருந்தில் பயணிகளிடம் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் அதிகளவில் UPI டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த தண்டாயுதபாணி (மத்திய பணிமனை), தக்ஷிணாமூர்த்தி (குரோம்பேட்டை – I பணிமனை) மற்றும் செந்தமிழ்ச்செல்வன் (அடையாறு பணிமனை) ஆகிய 3 நடத்துநர்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேற்று ரொக்க பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

News October 1, 2024

சென்னையில் 15 மண்டலங்களுக்கும் உத்தரவு

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேற்று (செப்.30) உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அனுமதி இன்றி வைக்கப்பட்டு பிளக்ஸ், பேனர்களை அகற்றும் பணியானது தொடங்கியது.

News September 30, 2024

பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

நேரு விளையாட்டு அரங்கில் Olive tree கல்வி குழுமத்தின் Sports meet 2024 நிகழ்ச்சி இன்று மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

News September 30, 2024

ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ்

image

அசோக் நகரில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், உரிய வழிமுறைகள்படி, முறையாக தடுப்புகள் வைக்காததால், ஐயப்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்வபத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!