India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று உதயநிதி ஸ்டாலினை வடசென்னை எர்ம்.பி கலாநிதி வீராசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், புகார் அளிக்க சென்றபோது, காவல் ஆய்வாளர் அவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் ‘போக்சோ விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்ததோடு, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்களில் 1311 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 317 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இன்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் தூய்மையான கடற்கரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமையான கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மெரினா கடற்கரையின் அனைத்து பகுதிகளிலும் புதிய குப்பை தொட்டிகள் வைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. குப்பைகளை மணர் பரப்பில் போடாமல் குப்பை தொட்டியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (ஆக.1) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டனர். ஏற்கெனவே உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநருடன் விழாக்களில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது கோவி. செழியன் பங்கேற்றுள்ளார்.
அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக தான் என்றும், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு கூட நாம் செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும் எனவும், கட்சி குறித்து பரப்பப்படும் பொய் செய்திகளை முறியடிக்கும் வலிமை அதிமுகவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட்போனை பெற மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். இதில், அதிகபட்சமாக செப். 6ஆம் தேதி மட்டும் 3,74,087 பேர் பயணித்துள்ளனர். எனினும் செப்டம்பர் மாதத்தைவிட ஆகஸ்டில் 2,65,928 பேர் அதிகம் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு (ஏப்ரல் – செப்டம்பர்) நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சொத்து வரி ரூ.880 கோடி, தொழில் வரி ரூ.260 கோடி என மொத்தம் ரூ.1,140 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.940 கோடி வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்கள் கடமையை சரிவர செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த தூய்மை பணியின் போது, காந்தி மண்டபத்தில் பல மதுபான காலி பாட்டில்கள் இருந்துள்ளன. அவை அனைத்தையும் அகற்றிய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர், காந்தி மண்டபத்தில் இதுபோன்ற மதுபாட்டில்கள் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.