India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஆளுநர் ஆர்என் ரவி பதவி விலக வேண்டும், மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. ஆளுநர் ரவி, தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்துவிட்டு ஒரு அரசியல் வாதி போல் செயல்பட்டு வருகிறார், ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது என்றார்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் “செம்பொழில் 2024” எனும் பெயரில் 3 நாள் கிராம திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழின் பெருமையை உணர்த்தும் வண்ணமாக பழங்கால உபயோகப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசியாக நடிகர் கார்த்திக் நடித்து வெளியான மெய்யழகன் படத்தில் நடித்த காளை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தலைவலி, காய்ச்சல், உடல் வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவரை அணுகாமல் தாமாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் பில்லர் நோக்கி தண்ணீர் ஏற்றிக் கொண்டுச் சென்ற டிராக்டர், உதயம் தியேட்டர் 100 அடி சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டர் ஓட்டுனர் சந்தோஷ் என்பவருக்கு கை எலும்பு முறிந்து, கே.கே. நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து, கிண்டி பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காது ‘ஸ்லைடர்’ ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட பயணிகள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 29ஆம் தேதி நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 04 அன்று 260 பேருந்துகளும்,05 அன்று 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலையிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அதனால், புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அதனால், மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி சென்னையில் இன்று காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் NSC போஸ் சாலை, மின்ட் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்குடை ஊர்வலம், NSC போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாகச் சென்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.
இன்று அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், எழும்பூரில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், காந்தியின் 156ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை (அக்.02) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து, கிண்டி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி, 1 மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.