India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, லேபா் காலனி, தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகா், சா்தாா் காலனி, கணபதி காலனி, அண்ணா நகா், J பிளாக், வைகை காலனி, வள்ளலாா் குடியிருப்பு, திருவள்ளுவா் குடியிருப்பு, திருமூலா் காலனி, தென்றல் காலனி, இமயம் காலனி, கைலாஷ் காலனி, தரமணி, MGR சாலை, பெருங்குடி, கல்லுக்குட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர்
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். “எனது கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு, நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் பல நாள் கோரிக்கைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில், வரும் 6ஆம் தேதி விமான சாகச நிகழ்ச்சியை நடத்துவதற்கு இந்திய விமானப்படை சார்பில் திட்டமிடப்பட்டது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டுவிட்டு பின்னர் மீண்டும் டெல்லி திரும்புவதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தினமும் 2 முறை இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரர் கூறியுள்ளார். இதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் 7 நவீன இயந்திரங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் குப்பைகளை போட மீன் வடிவிலான குப்பை தொட்டிகள் கூடுதலாக வைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
MMA நகர், திருவொற்றியூர், மணலி, லட்சுமிபுரம், புழல், இளங்கோ நகர், சத்தியமூர்த்தி நகர், சி.டி.ஹெச்., தொண்டியார்பேட்டை, செம்பியம், ஷெனாய் நகர், எம்.எம்.டி.ஏ., மாதவரம், நங்கநல்லூர், முகலிவாக்கம், பாலவாக்கம், சைதாபேட்டை, ஜாபர்கான்பேட்டை, நெற்குன்றம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பிசியோதெரபி மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
மணலி, திருவொற்றியூர், லட்சுமிபுரம், புழல், இளங்கோ நகர், சத்தியமூர்த்தி நகர், சி.டி.ஹெச். தொண்டியார்பேட்டை, செம்பியம், புளியந்தோப்பு, காசநோய் பிரிவு, ஒரகடம், முகப்பேர், அயனாவரம், திருவான்மியூர், ஷெனாய் நகர், எம்.எம்.டி.ஏ., மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு சம்மந்தப்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
அக்டோபர் 3ஆவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மாநகராட்சி மேற்கொள்ளும் நிவாரண பணிகளில் மாநகராட்சி உடன் இணைந்து செயல்பட 10,000 தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் முக்கிய பகுதிகளில் 36 படகுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்கொள்ளவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி, கால்வாய் தூர்வாரும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ஆளுநர் ஆர்என் ரவி பதவி விலக வேண்டும், மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. ஆளுநர் ரவி, தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்துவிட்டு ஒரு அரசியல் வாதி போல் செயல்பட்டு வருகிறார், ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.