India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 230க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து, 4 மாதங்களாக ஆய்வு நடந்தது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே முதன்முதலாக, சென்னையில் செயல்படும் கீழ்ப்பாக்கம் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 10ஆம் தேதிக்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக நிவாரண பணிக்காக 5 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சென்னையில், 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அலல்து மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸ் இருக்கக்கூடும்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அதிகாரிகளின் தொடர்பு எண் விவரங்கள் <
மதுரவாயலில் வசித்து வரும் நடிகை சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனா வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருடுவதற்காக மர்ம நபர்கள் 2 பேர் நேற்றிரவு முயற்சித்துள்ளனர். திருடர்களை கண்டு கூச்சலிட்ட சோனாவை, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மதுரவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்றுக்கு ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து, சென்னை மக்களுக்கு பிரதமா் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “துடிப்புமிக்க சென்னை நகரில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பொருளாதார வளா்ச்சிக்கும் இத்திட்டம் ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளாா். இதனால், சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் கடந்த வாரம் 1 கிலோ 35 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 1 கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விலையில் 50 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ தக்காளி, இன்று 80 ரூபாய்க்கும், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளியே சில்லறை விற்பனையில் 90 ரூபாய்க்கும் விற்பக்கப்படுகிறது. வரத்து குறைந்தது விலை ஏற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
சென்னையில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்: திரு.வி.க.நகர் பகுதியில் 18.6 மில்லி மீட்டர், அடையாறு பகுதியில் 16.8 மில்லி மீட்டர், மணலியில் 16.5 மில்லி மீட்டர், தேனாம்பேட்டை பகுதியில் 12.9 மில்லி மீட்டர், அடையார் பூங்கா பகுதியில் 9.9 மில்லி மீட்டர், சோளிங்கநல்லூர் பகுதியில் 9.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
பல கோடி ரூபாய் மோசடி செய்த சிவராமன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். , வண்ணாரப்பேட்டையில் ‘SATRULLA EXPRESS’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், நாடு முழுவதும் 30,000 பேரிடம் சுமார் ரூ.500 கோடி மோசடி செய்த கும்பலின் முக்கிய நபரான சிவராமனை, டெல்லி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சிவராமனின் வாங்கி கணக்கை முடக்கி ரூ.18 கோடியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னையில் திடீரென காய்ச்சல் ஏற்படுவது அண்மையில் அதிகரித்துள்ளது. பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அதுபோல இந்த காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலை வலி, மூக்கடைப்பு, தொண்டைப்புண் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதீத காலநிலை மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.