Chennai

News October 5, 2024

விமான கண்காட்சி: பேருந்துகள் வழித்தடங்கள் மாற்றம்

image

விமான கண்காட்சி காரணமாக, அண்ணா சிலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் வாலாஜா சாலை → திருவல்லிக்கேணி சாலை, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர்.நடேசன் சாலை → ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தவெளி, மயிலாப்பூர் வழியாகத் திருப்பிவிடப்படும். கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி → RA புரம் 2ஆவது பிரதான சாலை, TTK சாலை, ஆர்.கே.சாலை வழியாக அண்ணா சாலையை நோக்கி திருப்பிவிடப்படும்.

News October 5, 2024

விமான கண்காட்சி: பாரிஸ் நோக்கி வரும் வாகனங்கள் தடை

image

விமான கண்காட்சியை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸ் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை – அண்ணா சாலையைப் பயன்படுத்துவார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

News October 5, 2024

சென்னையில் 24 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

image

24 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி – கிண்டி, ஆர்.ரஞ்ஜித் குமார்- மாம்பலம், எஸ், விவேகானந்தன் – தண்டையார்பேட்டை, முகமது புஹாரி- திருவான்மியூர், மணிவண்ணன்- மெரினா, ஆனந்தன்- அயனாவரம், அம்பேத்கர்- புலியந்தோப்பு, ஆனந்தபாபு- திருவொற்றியூர் இடங்களுக்கு என 24 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News October 5, 2024

விமான கண்காட்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

image

வரும் 6ஆம் தேதி மெரினா கடற்கரையில், ‘ஏர் ஷோ 2024’ நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே மட்டுமே அனுமதி சீட்டுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் ஆர்.கே.க்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News October 4, 2024

2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்று

image

தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 230க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து, 4 மாதங்களாக ஆய்வு நடந்தது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே முதன்முதலாக, சென்னையில் செயல்படும் கீழ்ப்பாக்கம் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

10 ஆம் தேதிக்குள் கால்வாய்கள் தூர்வாரப்படும்

image

சென்னையில் வரும் 10ஆம் தேதிக்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக நிவாரண பணிக்காக 5 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சென்னையில், 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அலல்து மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸ் இருக்கக்கூடும்.

News October 4, 2024

பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அதிகாரிகளின் தொடர்பு எண் விவரங்கள் <>tnpcb.gov.in/contact.php <<>>என்ற வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை தொலைபேசி எண், மின்னஞ்சல், கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 4, 2024

நடிகை சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்

image

மதுரவாயலில் வசித்து வரும் நடிகை சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனா வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருடுவதற்காக மர்ம நபர்கள் 2 பேர் நேற்றிரவு முயற்சித்துள்ளனர். திருடர்களை கண்டு கூச்சலிட்ட சோனாவை, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மதுரவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News October 4, 2024

சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்றுக்கு ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து, சென்னை மக்களுக்கு பிரதமா் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “துடிப்புமிக்க சென்னை நகரில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பொருளாதார வளா்ச்சிக்கும் இத்திட்டம் ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளாா். இதனால், சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!