India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று(அக்.5) வள்ளலார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர் சிறியவர் இல்லை; அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம். இதைப் பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை ஜாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.
சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலமையில் திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அணி நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் ஆலோசனைகளை முடித்து கட்சியில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து திமுக தலைமைக்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளதாகவும் திமுக ஒருங்கிணைப்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாம் அனைவரும் ஒரு குடும்பத்தின் குழந்தைகள் என்று உணரும் போது ஒரு ஒளிகீற்று தென்படும், அந்த பிரகாசமான ஒளியை பின்பற்ற வேண்டும். அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பது நமக்கு உணர்த்தும் பாடமாகும். உடையால் வேறுபட்டாலும் உணர்வால் வேறுபட்டாலும் பண்பாட்டால் ஒன்றுதான். யாரும் மேலும் இல்லை கீழும் இல்லை நடுவிலும் இல்லை” என்றார்.
நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்த இருவரை, மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடிகை சோனா வீட்டில் புகுந்து ஏசி யூனிட்டை திருட மர்ம நபர்கள் 2 பேர் முயன்றபோது, சோனாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சிவா (23), லோகேஷ் (21) ஆகிய இருவரை சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக, மண்டல வாரியாக தலைமை செயலகத்தில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதில், செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசவுள்ளனர்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், நாள்தோறும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று மாலை தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, முகலிவாக்கம், செம்பியம், கோட்டூர்புரம், சத்தியமூர்த்தி நகர், சைதாப்பேட்டை, முகப்பேர், லட்சுமிபுரம், அயனாவரம், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை 4.30 மணி முதல் 8:30 மணி வரை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்திய விமானப்படையின் 92ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, வரும் 6ஆம் தேதி மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், 6,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் 9 அன்று 225 பேருந்துகளும், 10 அன்று 880 பேருந்துகளும் இயக்கய திட்டம். ஓசூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09 அன்று 35 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை விமான சாகசக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அங்கு சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா சாலையில், ஃபோர்ஷோர் சாலை VIP & WIP கார் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசிடென்சி கல்லூரி சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (ப்ளூ கலர் பாஸ் மட்டும் ).
Sorry, no posts matched your criteria.