Chennai

News October 6, 2024

மெரினா விமான சாகச நிகழ்ச்சி நிரல்

image

இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. இந்த சாகச நிகழ்ச்சியில் ஸ்கை டைவிங் திறன், ஆகாஷ் கங்கா, சூரிய கிரன் ஏரோபாட்டிக் குழு, க்ளோஸ் ஃபார்மேஷன் லையிங், ஸ்டன்னிங் ஏரியல் உள்ளிட்ட சாகசங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

News October 6, 2024

விமான சாகச நிகழ்ச்சியைக் காண முதல்வர் வருகை

image

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைக் காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இதுதவிர, லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மெரினா கடற்கரையில் நடைபெறும் ஏர் ஷோவை காண செல்லும் மக்கள், வெயில் மற்றும் மழை ஆகிய இரண்டிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள குடைகளை எடுத்துச் செல்வது நல்லது. ஷேர் பண்ணுங்க

News October 6, 2024

ஈசிஆர் அருகே விபத்து: காதலி பலி – காதலன் தற்கொலை

image

சென்னை ஈ.சி.ஆர். சாலை மாமல்லபுரம் அருகே, பைக் மீது பேருந்து உரசி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் சென்ற 20 வயது என்ஜினியரிங் பெண் சபரீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு உயிரான காதலி, தன் கண் முன்னே உயிரிழந்ததை பார்த்த வேதனை தாங்காத காதலன் யோகேஸ்வரன், அதே சாலையில் வந்த மற்றொரு பேருந்து முன்பு பாய்ந்து அடுத்த நொடியே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 6, 2024

வெளிநாட்டு வேலையில் மோசடி: சைலேந்திரபாபு எச்சரிக்கை

image

கம்போடியா, வியட்னாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு, முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், சைபர் குற்றவாளிகள் இப்போது கம்ப்யூட்டர், டைப்பிங் போன்ற வேலைகளை தெரிந்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, சைபர் குற்றத்தில் ஈடுபட வைப்பதாகவும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 6, 2024

சைக்ளோத்தான் போட்டியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

image

தமிழக விளையாட்டு ஆணையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சென்னை ‘சைக்ளோத்தான் 2024’ போட்டியை முன்னிட்டு இன்று காலை 4.30 மணி முதல் 9 மணிவரை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மனித சக்தி பெருக்கம் ஆகியவை குறித்த விழிப்புணர்விற்காக நடத்தப்படும் இந்தப் போட்டி, அக்கரை சந்திப்பு துவங்கி கோவளம் வழியாக மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு வரை நடைபெற உள்ளது.

News October 5, 2024

சனாதானா தர்மத்தில் வேறுபாடு இல்லை – ஆளுநர் ரவி

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று(அக்.5) வள்ளலார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர் சிறியவர் இல்லை; அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதனம். இதைப் பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை ஜாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.

News October 5, 2024

திமுக அணி நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம்

image

சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலமையில் திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அணி நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் ஆலோசனைகளை முடித்து கட்சியில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து திமுக தலைமைக்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளதாகவும் திமுக ஒருங்கிணைப்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

நாம் அனைவரும் ஒரு குடும்பத்தின் குழந்தைகள் தான்

image

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாம் அனைவரும் ஒரு குடும்பத்தின் குழந்தைகள் என்று உணரும் போது ஒரு ஒளிகீற்று தென்படும், அந்த பிரகாசமான ஒளியை பின்பற்ற வேண்டும். அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பது நமக்கு உணர்த்தும் பாடமாகும். உடையால் வேறுபட்டாலும் உணர்வால் வேறுபட்டாலும் பண்பாட்டால் ஒன்றுதான். யாரும் மேலும் இல்லை கீழும் இல்லை நடுவிலும் இல்லை” என்றார்.

News October 5, 2024

நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது

image

நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்த இருவரை, மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடிகை சோனா வீட்டில் புகுந்து ஏசி யூனிட்டை திருட மர்ம நபர்கள் 2 பேர் முயன்றபோது, சோனாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சிவா (23), லோகேஷ் (21) ஆகிய இருவரை சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!