India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெரினாவில் நடந்த விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காண வந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட 230 பேரில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தூரார், ராஜுவ்காந்தி, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. மெரினா சாகச நிகழ்ச்சி முடிந்து 2 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் தற்போது சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து சீரானது. ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனையடுத்து, வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த மக்கள் வசதிக்காக வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையே 3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிப்பதற்காக, பிங்க் நிற ஆட்டோக்கள் சென்னையில் வரவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடவுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் 250 பிங்க் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஓட்டுநராக விரும்பும் பெண்களுக்கு, ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். சென்னையைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் பிங்க் ஆட்டோ சேவை வரும். உங்கள் கருத்து என்ன?
சென்னை மெரினா கடற்கரையில், விமானப் படை சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருடன் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி, துரை முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை மெரின கடற்கரையில், விமானப் படை சாகச நிகழ்வு தற்போது தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஆகாஷ் கங்கா விமான குழுவினர், பாராசூட் மூலமாக தரை இறங்கி அசத்தினர். 5 வீரர்கள் பாராசூட்டுடன் விமானத்திலிருந்து குதித்து, தங்கள் அடைய வேண்டிய இலக்கை வெற்றிகரமாக அடைந்தனர். பொதுமக்கள் கரகோஷங்கள் எழுப்பி உற்சாகத்துடன் இதனை கண்டு பிடித்தனர். நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் அலைபோல் திரண்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த முறையில் உதவி மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காண, மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சாகசத்தை நிகழ்த்த விமான ஓட்டிகள் அனைவரும் தயாராகி வரும் நிலையில், பொதுமக்களின் கூட்டம் தற்போது முதல் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணியளவில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட உள்ளனர். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 10,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். நீங்க ரெடியா?
வில்லிவாக்கம் பகுதியில் உள்ள உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சாப்பிட்ட போண்டாவில் பிளேடு துண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிளேடு போண்டா குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாடிக்கையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நீங்கள் சாப்பிடும் உணவுகள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.