Chennai

News April 3, 2025

பிலால் ஹோட்டல் விவகாரம் – இதுவரை 55 பேர் பாதிப்பு

image

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரின் உடல்நலம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 55 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

News April 3, 2025

மன அமைதி இல்லையா இங்கே செல்லுங்கள்

image

சென்னை கந்தகோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. வள்ளலார் அடிக்கடி வழிபட்ட ஒரு கோயில் இது. அவர் தனது புகழ்பெற்ற ஜோதிர் லிங்க தரிசனத்தை இங்கு தான் கண்டார். இது மனம், உடல், இதயத்தை தொந்தரவு செய்யும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சிந்தனையை கொடுத்தது. எனவே, கஷ்டம், மன நிம்மதி இல்லாதவர்கள், சுகவீனம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் அனைத்தும் நீங்கி சுபம் கிட்டும். ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

கேந்திரிய வித்யாலயா பள்ளி பேரில் போலி இணையதளம்

image

சென்னையில், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இப்பள்ளியின் இணையதளம் பேரில், போலி இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் எனவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் <>kvsangathan.nic.in<<>> என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பகிரப்படும் என்றும் கல்விப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 3, 2025

சென்னை மாநகராட்சியில் வேலை

image

சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணபிராத்தை இந்த <>லிங்கை <<>>க்ளிக் பதிவிறக்கம் செய்து கொண்டு அவற்றை பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ரிப்பன் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

image

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

News April 3, 2025

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், கோயம்பேடு, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News April 2, 2025

சோடியம் நைட்ரேட் ஊசி செலுத்தி மாணவர் உயிரிழப்பு

image

கொடுங்கையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பால் யூட்டி கிளாஸ்(20), செல்போனுக்கு அடிமையான இவர் மன அழுத்தத்தில் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சோடியம் நைட்ரேட் ஊசியை தனக்கு தானே செலுத்தி மயக்கமடைந்துள்ளார். பதறிபோன பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்க வேண்டிய வயதில் இவ்வாறு நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News April 2, 2025

சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்

image

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போரது எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் (2025) மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7ஆம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை டிக்கெட்டிற்கு 20% தள்ளுபடி செய்கிறது.

News April 2, 2025

பிரபல பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

image

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல பிலால் தனியார் ஓட்டலில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாந்தி மயக்கத்திற்கு உள்ளன 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியால் இவ்வாறு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <>ஷேர் பண்ணுங்க<<>>

error: Content is protected !!