India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வரும் 12ஆம் தேதி காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில், நவம்பர் 14 மற்றும் 15ம் தேதி பருவமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பிரியா கூறியது – முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னை உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். எந்த இடத்தில் மழைநீர் தேக்கம்பெறும் என கண்டறிந்து. மழைநீர் தேக்கம் பெரும் இடங்களில் மோட்டார் மற்றும் ஹிம் பைப் வசதிகள் அமைக்கப்படவுள்ளன என கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று தேசிய சட்ட சேவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இலவச சட்ட உதவி கிடைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அனைவருக்கும், குறிப்பாக சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த நாளின் நோக்கமாகும் என்று சென்னை பெருநகர காவல் துறை சமூக வலைத்தளத்தில் இன்று பதிவிட்டது.
சென்னை குடிநீர் வாரியம் இன்று (09.11.24) குடிநீர் வாரிய 15 பகுதிகளிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் பகுதிகளின் பெயர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கழிவு நீர் குடிநீர் பிரச்சினைகள், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்கே கார்டன், ஸ்ரீநகர், எஸ்வி பண்ணை, மாலிவாக்கம், ஆமூர் ஜகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை.
சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்த நிலையில், மீண்டும் 12, 13 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடசென்னை பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மணலி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்வது உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில் தடையை மீறி சென்னையில் பேரணி நடைபெற்றது. இதையடுத்து, கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்ட நிலையில், பேரணியில் ஈடுபட்ட 686 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, இன்று காலை வரை இயல்பை விட 7% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (நவ.8) காலை வரை 235.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 252.5 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
Sorry, no posts matched your criteria.