Chennai

News August 12, 2025

BHEL-ல் சூப்பர் வேலை! APPLY NOW

image

தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <>இந்த லிங்கின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 12, 2025

சென்னைக்கு வந்த விமானத்தில் தீ விபத்து

image

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம், இன்று (ஆகஸ்ட் 12) காலை ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 4ஆவது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. இதை உடனடியாக கண்டறிந்த விமானி, பத்திரமாக விமானத்தை தரை இறக்கியுள்ளார். மேலும் விமானம் நிறுத்தப்பட்டதும், இழுவை வாகனங்கள் மூலம் விமானம் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயணைக்கப்பட்டது.

News August 12, 2025

சென்னையில் ஆசிரியர் வேலை… கடைசி வாய்ப்பு

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இந்த <>லிங்கில் <<>>அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம் இருக்கு. ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

FLASH: சென்னையில் உயிரை பறித்த NEET தேர்வு

image

சென்னை கொடுங்கையூரில் NEET தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி மதனஸ்ரீ (17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். NEET தேர்வால் தற்கொலைகள் தோஈடர்ன்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

News August 12, 2025

சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்… நோட் பண்ணிக்கோங்க

image

சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 11) 55 புதிய மின்சார AC பேருந்துகள் தொடங்கப்பட்டன. விமான நிலையம் – சிறுசேரி வரை 15, கிளாம்பாக்கம் – திருவான்மியூர் வரை 5, கிளாம்பாக்கம் – சோழிங்கநல்லூர் வரை 5, தி.நகர் – திருப்போரூர் வரை 5, பிராட்வே – கேளம்பாக்கம் வரை 5, கோயம்பேடு – கேளம்பாக்கம் அல்லது சிறுசேரி வரை 20 என இயக்கப்பட உள்ளன. மேலே உள்ள படத்தை 2 முறை தொடுங்கள் முழு விவரம் இருக்கும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்க

News August 12, 2025

தாம்பரம்: விமானப் படையில் ஆட்சேர்க்கை

image

அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு வரும் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளது என சென்னை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ்-2ல் 50% தேர்ச்சியுடன் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆட்சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News August 12, 2025

மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

image

சென்னையில் இன்று (ஆக.12) அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், பெருங்குடி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<> இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

இல.கணேசனுக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 3-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்கை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News August 12, 2025

ஆதார் இல்லாததால் பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்

image

பூவிருந்தவல்லியை சேர்ந்த மாணவன்சந்தோஷ். இவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதார் அட்டை இல்லாததால் பல சிரமங்களை சந்தித்துள்ளார். இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட பல அலுவலகங்களுக்குச் சென்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!