India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு, பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.20, 21) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அந்நேரங்களில், வள்ளுவர் கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
வியாசர்பாடி மேம்பாலத்தில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து, இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனது குழந்தை தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த தந்தை பாலமுருகன், “இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு (Luggage), சுமைக் கட்டணம் வசூலிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் 1 பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 60 நாட்கள் என இருந்த அவகாசம், தற்போது 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் கூறியது. tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூட்டுறவு வார விழா’ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் – கூட்டுறவு சங்கம், கூட்டுறவு இணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் உடன் இருந்தார்.
சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க MTC திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பிராட்வே மற்றும் முகப்பேர் (7M) வடபழனி, தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதேபோன்று சென்னை மண்டலம் முழுவதும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 3 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முன்னறிவிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் மற்ற விமானங்களுக்கு பயணத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26ஆம் தேதி இரவு 11.10 மணி முதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.