Chengalpattu

News November 19, 2024

16ஆவது மத்திய நிதிக்குழுவினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட வடநெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பகுதியினை பார்வையிட வருகை புரிந்த 16ஆவது மத்திய நிதி குழுவினர் (நவ-19) செங்கல்பட்டு வந்தடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 19, 2024

எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் நவ.20ஆம் தேதி சென்னை எழும்பூர் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (20681) இரவு 8.55 மணிக்கும், 21ஆம் தேதி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (12667) இரவு 7.30 மணிக்கும், 23ஆம் தேதி சென்னை எழும்பூர் – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (22663) பகல் 2.50 மணிக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

News November 19, 2024

வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அட்வைஸ்

image

பயணம் செய்யும் நேரங்களில் வாகனங்களை பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் இயக்கினாலே விபத்தில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளனர். மேலும், சாலை விதிகளை கடைப்பிடித்தால் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வேகமாக இயக்குவது, சாகச பயணங்களில் ஈடுபடுவது, சக வாகன ஓட்டினை அச்சுறுத்துவது போன்ற செயல்கள் வேண்டாம்.

News November 19, 2024

மாடம்பாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், நிலம் வரைமுறை திட்டத்தின் கீழ் சுமார் 600 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதனை கண்டித்து அதிமுக சார்பில் மாடம்பாக்கம் அருகே பதுவஞ்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.

News November 19, 2024

280 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

image

செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வங்கி கடன், மகளிர் உரிமைத் தொகை, சிறு தொழில் தொடங்க வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

News November 19, 2024

மகளிர் சுயஉதவிக்குழு கண்காட்சி: அமைச்சர் பார்வை

image

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், 71ஆவது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டு, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1,678 பயனாளிகளுக்கு ரூ.35.71 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.

News November 19, 2024

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்

image

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19ஆ ம் முதல் 25ஆம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.19) மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்டவை இலவசமாக காணலாம்.

News November 19, 2024

ஆபாசப்படம் வெளியிட்ட கணவன்: கைது செய்ய கோரி தர்ணா

image

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட கணவரை கைது செய்ய வலியுறுத்தி, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பல்லாவரம் உதவி ஆணையர் வெங்கட் குமார், மாதர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையிட்டு ஈடுபட்டு, ஓரிரு தினங்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News November 19, 2024

பிறந்த அடுத்த நொடியே கொன்ற கொடூர தாய்

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷகீனாபேகம் (22), ஒரகடம் பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், தனது காதலன் சுமனை அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். காதலன் சுமன் தலைமறைவாகிவிட்ட நிலையில், கர்ப்பமான ஷகீனாபேகத்திற்கு நேற்று குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த மறு நிமிடமே குளத்தில் வீசி குழந்தையை கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1,995/– மதிப்புடைய பிரெய்லி கைகடிகாரம், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500/– மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 7 பேருக்கு சலவைப் பெட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

error: Content is protected !!