India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வண்டலூரில் இருந்து செங்கல்பட்டுக்கு, நேற்று இரவு 8 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் முத்து(24), தென்காசி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளனது. இதில், முத்து சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழதார். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுதும் புதிய கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொள்ளூர், ஆகிய வட்டாரங்கள் உள்ளன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் பிப்.2ஆம் தேதி வரையிலும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் சேவை பிப்.6ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மற்றும் நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.21) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங் போர்டு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி 20.11.2024 மற்றும் 21.11.2024 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR) வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே, மேற்படி பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் இது ஒத்திகை பயிற்சி என்பதால் இதுகுறித்து எவரும் பதற்றம் அடையவோ மற்றும் அச்சம் கொள்ளவோ வேண்டாம் என்று ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பினாங்கிற்கு, விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.
திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட வடநெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பகுதியினை பார்வையிட வருகை புரிந்த 16ஆவது மத்திய நிதி குழுவினர் (நவ-19) செங்கல்பட்டு வந்தடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.