Chengalpattu

News November 8, 2024

வழக்கறிஞரை தாக்கிய நால்வர் கைது

image

திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தைச் சேர்ந்தவர் சுதன்குமார் (30). வழக்கறிஞரான இவர், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வல்லிபுரம் வந்து கொண்டிருந்தபோது, ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த 4 பேருடன் தகராறு ஏற்பட்டது. இந்த தகராரில், சுதன்குமாரை நால்வரும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து திருக்கழுக்குன்றனம் போலீசார் விசாரித்து குமரேசன், சந்தோஷ், சுகுமார், கருணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News November 8, 2024

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார், “செங்கல்பட்டு கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் மூன்றாவது மாடியில், செங்கல்பட்டு மண்டல இணை பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில், மண்டல இணை பதிவாளர உள்ளிட்டோர் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே, பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பாகவும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்” என்றார்.

News November 8, 2024

செங்கல்பட்டில் இன்று மின்தடை அறிவிப்பு

image

செங்கல்பட்டில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலூர், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, திருவடிசூலம், மடையத்தூர், அனுமந்தபுரம், காலவாக்கம், ஆலத்தூர், சிட்கோ, கருங்குழிபள்ளம், பண்டிதமேடு, பையனூர், கூத்தவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News November 8, 2024

தாசில்தாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஏஓக்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா தாசில்தாராக இருப்பவர் புஷ்பலதா. இவர், வண்டலூர் தாலுகாவில் பணிபுரியும் 17 வி.ஏ.ஓ.க்களுக்கு, திடீரென மெமோ அளித்துள்ளார். மெமோ அளிக்க காரணம் என்ன என வி.ஏ.ஓ.க்கள் கேட்டதற்கு எந்தவித காரணத்தையும் கூறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வி.ஏ.ஓ.க்கள் அலுவலக உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதனால், ஊராட்சி வருவாய் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2024

தாம்பரம், குரோம்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டில் விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக, நேற்று இரவு தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம், பெருங்களத்தூர் மேம்பாலம், தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. உங்க ஏரியாவில் நேற்று மழை பெய்ததா?

News November 8, 2024

பெரும்பேர் கண்டிகை மலை மீது ஜொலிக்கும் வேல்

image

அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் உள்ள வஜ்ரகிரி மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. 5300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். கந்த சஷ்டியையொட்டி மலை மீது உள்ள வேல், மின் அலங்காரம் செய்யப்பட்டு, மின் ஒளியில் ஜொலித்தது.

News November 8, 2024

ஆட்சியர் தலைமயில் ஆய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.11.24) தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டிபள்ளி ராம்சந்தர் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இயக்குனர் பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் இயக்குநர் டாக்டர்.எஸ்.ரவிவர்மன் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

News November 7, 2024

டெங்குவால் உயிரிழந்த சிறுமிக்கு ஈபிஎஸ் இரங்கல்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு – அமுல் தம்பதியின் 6 வயது இளைய மகள் யாத்திகா காய்ச்சல் காரணமாக உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. சிறுமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்

News November 7, 2024

லாரியின் பின்பக்கம் மோதிய பேருந்து

image

மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இதில், பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் உருக்குலைந்து போனது. பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 7, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க