India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாமல்லபுரம் அருகே உள்ள வட நெம்மேலியில், பீச் வாலிபால் போட்டி நேற்று தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என தலா 24 அணிகள் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். வரும் 24ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.
திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பிரபல ரவுடி சீர்காழி சத்யாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை அவர் நிறைவேற்றாததால், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது 5 கொலை உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் நடைபெற உள்ள நாட்டிய விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேற்று (21.11.2024) ஆய்வு மேற்கொண்டார். இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் நடைபெற்ற சார் ஆட்சியர் நாராயண ஷர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கடற்கரை விடுதியில் உள்ள சமையல் கூடத்தினை, சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே நேற்று முதல் வரும் 23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு, 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணியரின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் வளாகத்தில, கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையில், தேசிய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறையினர் கலந்து கொள்ள உள்ளனர். வண்டலூரில் இருந்து கல்பாக்கம் வரையில் இந்த பாதுகாப்பு படை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க
செங்கல்பட்டு அருகே திம்மாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வலம்புரி பால விநாயகர் ஆலயத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சத்தம் கேட்டுள்ளது. உடனே, அருகில் இருந்த பாஸ்கரன்(43 ) என்பவர், சென்று பார்த்தபோது அங்கு 3 பேர் கோயில் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
திருவிடந்தை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 218 ஏக்கர் நிலத்தில் சுற்றுலாத்துறை ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது, இந்த கலாச்சார பூங்காவின் மூலம் வரக்கூடிய வருமானத்தை சுற்றுலா துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு வாழ்த்தினார். இந்த நிகழ்வில் பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.