India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 64 ஏரிகள் சமூக பொறுப்பு நிதி 5.17 கோடி ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏரிகள் துார்வரும் பணிக்கு, முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குநர் மூலம் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 21.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ரூ.34,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc, BSMS, BUMS, Literate படித்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நாளை(ஏப்.16) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். <
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
சங்க நூலான சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழிநாடு பகுதியைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படையை எழுதிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த ஊராக விளங்கி வருகிறது.இரு பெரும் உப்பளக் கால்வாய்களின் மத்தியில் இந்த ஊர் அமைந்துள்ளது. தமிழ் மூதாட்டி ஔவையாரும், திருவள்ளுவரும் இடைக்கழி நாடு வழியாக படகு மூலம் மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிய கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு 3 லட்ச ருபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 15) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு, 10 வகுப்பு பாஸ்/ஃபெயில் ஆன 18-40 வயதுடைய பெண்கள் https://chengalpattu.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, இந்த மாதம் 17- 29-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கு பகிரவும்
Sorry, no posts matched your criteria.