India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி ஓய்வு பெறும் நாளில் ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் ஆண் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு பணியாளர்கள் பங்கேற்ற ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, காய்ச்சல் பிரிவுக்கு சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கள ஆய்வுக் குழுவினை அமைத்துள்ளார். அதன்படி செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் டி.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தைச் சேர்ந்த சுதன்குமார் என்ற வழக்கறிஞர் மீது கடந்த 7ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கண்ணகி நகர் காவல் நிலையத்தில் உள்ள தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரி அருகே ஒக்கியம் மடு ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்க நிகழ்ச்சி செங்கல்பட்டு தூய மரிய அன்னை மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் அருண்ராஜ், மாணவர்களை வாழ்த்தி போட்டிகளை துவங்கி வைத்தார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காட்டாங்குளத்தூர் கன்னியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் விஜயா ஆனந்த் (35) நேற்று இரவு 8:40 மணிக்கு ஜிஎஸ்டி சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று இவர் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணிக்கு உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பாண்டிச்சேரியை சார்ந்த எபினேசர் (47) கைதானார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். https;//bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஜன., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எட்டு தாலுகா தலைமை இடங்களிலும், சிறப்பு கடன் முகாம் இன்று முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. பல்லாவரத்தில் இன்றும், தாம்பரத்தில் நாளையும், வண்டலுாரில் நாளை மறுநாளும் இம்முகாம் நடக்கிறது. இதனை பயன்படுத்தி பயனடையுமாறு செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்
Sorry, no posts matched your criteria.