India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.22) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
செங்கல்பட்டு மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <
செங்கல்பட்டு மக்களே..! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை உடன் ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க <
செங்கல்பட்டு மக்களே! புரட்டாசியில் வரும் சனிக்கிழமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல இந்த மாதம் வரும் அமாவாசையும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். இந்த நாளில் நீங்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் திதி கொடுத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு அரசின் SDAT தனியார் நிறுவனம் சார்பில் இன்று விடியற்காலை 4.30 மணிமுதல் 9.30 மணிவரை சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியினை கானாத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இந்த போட்டி நடைபெற்றது.15 கி.மீ 25 கி.மீ மற்றும் 50 கி.மீ என 3 பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் இ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஒன்று டீசல் இல்லாமல் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். மேலும், அந்த பகுதியில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நிலைமை சீரானதால் வாகனங்கள் சென்றன. பேருந்தை எடுக்கும் போதே டீசல் உள்ளதா என்பதை ஓட்டுநர் உறுதி செய்யவேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தீடிரென மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு, சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வந்தனர். விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்தன.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலான தீர்மான ஏற்புப் பொதுக்கூட்டம் இன்று (செப். 20) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
Sorry, no posts matched your criteria.