India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
1.கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
2.ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
3.வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
4.ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
5.சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
6.கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
7.ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
8.காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு மக்களே மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், ITல் பொறியியல் படித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
செங்கல்பட்டு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே, எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000 மிகாமல் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திருவேற்காடு, ஈஸ்வரன் நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவரசன், 41; இவரது மனைவி சரண்யா, 36. கடந்த 28ம் தேதி, அறிவரசன் டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் மனைவியுடன், ஆவடி – பூந்தமல்லி சாலையில் சென்று கார் மோதி இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய அரசு மருத்துவரான பாரி மார்க்ஸ், 46 கைது செய்யப்பட்டுள்ளார். காரை வேகமாக ஓட்டிச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரிந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.22) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
Sorry, no posts matched your criteria.