India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் முழுமையாக கட்டணமின்றி ஏற்பாடு செய்யப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் www.hrce.tn.gov.in என்ற இளையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 10) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
செங்கல்பட்டு அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடி பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் இங்கு தினமும் இரண்டு கழுகுகள் (பட்சி) வந்து உணவு உண்பதாக ஒரு நம்பிக்கை இருந்தது. இதனால் இத்தலம் “பட்சி தீர்த்தம்” என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தானாகவே தோன்றுவதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஷேர்!
‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்கிவிட்டதால் உடனே புக் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!<<17359009>>தொடர்ச்சி<<>>
வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17359016>>தொடர்ச்சி<<>>
வரும் 14-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இந்த ரயில் செல்லும். மறுமார்க்கத்தில் வரும் 17ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். <<17359020>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.