Chengalpattu

News February 10, 2025

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற (பிப்21) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 30க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் 1000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது 10th 12th
ஐடிஐ டிப்ளமோ டிகிரி இன்ஜினியரிங் போன்ற கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை கட்டாயம் சான்றிதழ் கொண்டு வரவும்

News February 10, 2025

கூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சார்-ஆட்சியராக பணிபுரிந்த வெ.ச.நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இன்று (பிப். 10 ) பிற்பகல் 12 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

News February 10, 2025

செங்கல்பட்டு ஆட்சியருக்கு டும்.. டும்.. டும்..

image

செங்கல்பட்டு ஆட்சியராக உள்ள அருண்ராஜ் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார். இவருக்கும், மேகநாதன்-ஜெயந்தி தம்பதியரின் மகள் மருத்துவர் கௌசிகாவுக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலை 4.30- 6.00 க்குள் சுபமுகூர்த்த நேரத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆட்சியர் அருண்ராஜ்க்கும், கௌசிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 10, 2025

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது: மீறினால் நடவடிக்கை

image

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாகவோ இதர வழிகளில் மது விற்பனை செய்தாலோ, உரிய சட்ட விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News February 10, 2025

செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளர் கைது

image

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். மேலும் இவர் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், 22 வயது இளம்பெண்ணை காதலிப்பாக கூறி உல்லாசமாக இருந்து திருமணம் செய்ய மறுத்து வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

News February 9, 2025

தேசிய அளவிலான போட்டியில் செங்கல்பட்டு மாணவிகள்

image

மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் – 2025 போட்டி, சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ – மாணவியர் 3 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பயர் டேக்வாண்டோ கிளப் சார்பில் 20 பேர் பங்கேற்றனர். இதில், 10 பேர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள், வரும் ஜூன் மாதம் லக்னோவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகினர்.

News February 9, 2025

குத்துச்சண்டை போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை

image

கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் சாதனாஸ்ரீ (17). தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட 50-52 கிலோ எடை பிரிவில் மாணவி கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், இவர் ஏற்கனவே தேசிய, பல்வேறு மாவட்ட அளவில் நடைபெற்ற ஏராளமான போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்

News February 9, 2025

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 205 மனுக்கள் வரப்பெற்றன

image

செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம் நேற்று (பிப்.8) நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் என 205 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன் அடைந்தனர்.

News February 9, 2025

விஷம் கலந்த மதுவை அருந்திய நண்பர்கள்: ஒருவர் பலி

image

வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவரது நண்பா் கார்த்திகேயன், கடந்த 6ஆம் தேதி இரவு வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் கார்த்திகேயன் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கினார். அப்போது அங்கு வந்த நாகராஜ் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் மீதமிருந்த மதுவை அருந்தி வீட்டுக்குச் சென்று விட்டார். நாகராஜ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!