India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் பஜார் சாலையில் தனியார் ரத்த பரிசோதனை மையம் செயல்படுகிறது. நேற்று (பிப்.11) காலை, ரத்த பரிசோதனை மையத்தின் உட்புற பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் தீயும் பற்றி எரியத் தொடங்கியது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில், ரத்த பரிசோதனை மையச் சாதனங்கள், ‘பிரிஜ், ஏசி’ உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின.
செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அலுவலகத்தில் உள்ள 2 துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் காலி பணியிடங்கள் தகவல்களை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் https://chengalpattu.dcourts.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்.21ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. #Share_ it
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை https://tnprivatejobs.tn.gov.in/home/jobs என்ற இணையதளத்தில் காணலாம். 6383460933 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (பிப்.11) செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுகூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில், மதுபானக்கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமான கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <
லியாஸ் தமிழரசனின் லீலைகள் குறித்து பதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, இந்த பெண் மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோக்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களிடமும் ஒரே வசனத்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, அதனை மறுத்ததோடு வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் லியாஸ் தமிழரசன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்தபோது, பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மற்றும் நகையை பெற்றது தெரியவந்தது. மேலும், பல பெண்களுடன் அவர் இருந்த வீடியோக்களும் அதில் அவரது செல்போனில் இருந்தது.
சென்னை, செம்பாக்கம் திருவிக நகரைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன், தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 2018 ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
சென்னையில், காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளரான லியாஸ் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், மேலும், பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நகை, பணத்தையும் பெற்றுள்ளார்.
காலி பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரியை, ஓட்டுநர் பழவேலி சாலையோரத்தில் ஓரங்கட்ட முயற்சித்துள்ளார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பீர்பாட்டில் ஏற்றிவந்த லாரியின்மீது வேகமாக மோதியது. இதில், சாலையோர பள்ளத்தில் உருண்டு 2 லாரிகளும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாழைப்பழத் தார்கள் நசுங்கி சேதமாகின. பீர்பாட்டில்கள் சாலையில் உருண்டு உடைந்து சிதறின.
Sorry, no posts matched your criteria.