India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஜெயலலிதா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ராமகிருஷ்ணன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, உடன் பணியாற்றுபவர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் முன்னறிவிப்பு இன்றி, நேற்று ஆன்லைன் டிக்கெட் முறை அமலானது. இதனால், பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, ஒரு நேரடி டிக்கெட் கவுண்டராவது இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, ஒரு நுழைவு டிக்கெட் கவுண்டர், ஒரு பேட்டரி வாகன கவுண்டர் மீண்டும் திறக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
பல்லாவரம் ஜீவன் நகரைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி (42), கண்டோன்மென்ட் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவரது மகனுக்கு கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்கு ஓட்டுநராக பணிபுரியும் நிலோஷ் மோகன் (36), ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி பணி ஆணையை வழங்கியுள்ளார். வேலைக்கு சென்றபோது அது போலி என தெரியவர, இதுகுறித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.
கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் கமலக்கண்ண (14) கோவிலம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் நண்பர்களுடன் சுண்ணாம்பு கொளத்தூர் சிவா விஷ்ணு கோயில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். நீச்சல் தெரியாத கமலக்கண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
சென்னையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், மதுராந்தகம், பெருங்களத்தூர், கோவளம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கவனமாக செல்லவும். உங்க ஏரியாவில் மழையா?
நந்திவரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். இதில், எவ்வாறு படிப்பது, உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு சேர்வது, நேர மேலாண்மை, பொழுதுபோக்கு, விளையாட்டில் ஆர்வம் செலுத்துதல், இலக்குகளை தீர்மானித்தல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைதல், உயர் பதவிகள் பெற்று சமூகத்திற்கு சேவை செய்தல் போன்ற தகவல்கள் சார்ந்து கலந்துரையாடி விளக்கங்கள் பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையில் பதிவு செய்துள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட திறன்வளர்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் வாழ்வாதார பயிற்சிகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பயிற்சி நிறைவடைந்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் உள்ளனர்.
கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நளிணா, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், நேரில் அழைத்து, பாராட்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெண்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி முதல் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம் வரை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி (யோகா) மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார். குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “Walk for Children” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.