Chengalpattu

News March 23, 2024

செங்கல்பட்டு: பங்குனி உத்திர திருவிழா

image

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரு கருணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

News March 23, 2024

செங்கல்பட்டு அருகே வெடித்தது போராட்டம்

image

மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலு நேற்று தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பாலுவின் காரில் இருந்த “Fastag” ஸ்கேன் ஆகாததால் சுங்கசாவடி ஊழியர், பாலு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீடிரென சுங்கசாவடி ஊழியர்கள் பாலுவை தாக்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News March 23, 2024

செங்கல்பட்டில் மாணவி விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். மார்ச்.22 தினமான நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய்மதிபாலா (12) மரகன்றுகளை வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.

News March 22, 2024

செங்கல்பட்டில் மாணவி விழிப்புணர்வு

image

மார்ச்-22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் ஆறாம் வகுப்பு மாணவி மரகன்றுகளை வழக்கி இன்று (மார்ச்-22) விழிப்புணர்வு செய்தார். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் சோதனை சாவடியில்
குமாரலிங்கம் (28) என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 22)பறிமுதல் செய்தனர். அதனை செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ஒருவர் கொலை 

image

கானத்தூர் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன்(42) யோகா மாஸ்டர். இவரை கடந்த 13ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (38), கஸ்துாரியை (35) விசாரித்ததில் இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று(மார்ச்.21) கைது செய்துள்ளனர். 

News March 22, 2024

பல்லாவரம்: நாடாளுமன்ற ஆலோசனைகூட்டம்

image

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி-1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பம்மல் தெற்கு பகுதிக்குட்பட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 21, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மரகன்றுகள் நடும் விழா

image

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா இன்று (மார்ச்-21) நடைபெற்றது. ஆலப்பாக்கம், வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தார். 

News March 21, 2024

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!