India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார் எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் அரசு கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் இருந்த காய்ந்த புற்களால் நேற்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள், செடி, கொடிகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா இன்று முதல் ஏப் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலாவும் 5 ஆம் நாளான மார்ச் 31 இல் கருட சேவை, 7 ஆம் நாள் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்சில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வரும் ஏப். 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம், வடகடம்பாடி தனியார் சிற்பக்கூடத்தில் உலோக சிற்ப பிரிவின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ராஜேந்திரன் வடிவமைத்த 200 கிலோ எடை கொண்ட 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் வெண்கல சிலை நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரபாகரன் நேற்று (மார்ச்-25) (ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரவிச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரேம்குமார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்யும் போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.