Chengalpattu

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

பாலாற்றில் பண்டைய கால நாணயங்கள்  கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் ஆய்வுசெய்த போது ராஜராஜ சோழன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த வட்ட வடிவ செப்பு நாணயம் கிடைத்துள்ளது.
தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதே முத்திரை அமைப்புடன் உள்ளது. நாணயத்தின் முன்புறம் மன்னர் நின்றவாறும், பின்புறம் அமர்ந்தவாறும் உள்ளார்.
உலோக நாணயத்தில், முன்புறம் துதிக்கை துாக்கி பிளிறும் யானை, பின்புறம் உஜ்ஜயினி ஸ்ரீவத்சம் எழுத்து சின்னம் உள்ளது.

News March 31, 2024

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

மாமல்லபுரத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வெண்ணெய் உருண்டைக் கல் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News March 31, 2024

செங்கல்பட்டு: திமுக கிணற்று தவளை

image

திமுகவுக்கு மாற்று பாஜக தான் திமுகவும் அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது. திமுகவை மக்களவை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி சென்றது.  திமுக கிணத்து தவளை கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அடுத்த ஸ்டேஷன் தெரியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

image

பல்லாவரம் அருகே திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, காயத்ரி தம்பதியர். இவர்களுக்கு பிரணவ் ராஜ் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வேலைக்கு சென்ற போது ராஜகுரு தனது குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்பு

image

 புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (75). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி ஏரியில் கிருஷ்ணனின் உடல் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2024

தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

image

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் , சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது. அதன்படி,  மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம் , மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் – வண்டலுார் சாலை, வி.ஐ.டி.,கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.

News March 29, 2024

செங்கல்பட்டு: போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

image

மறைமலைநகர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை கீழே விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளித்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியது. இந்நிலையில், இதனை கண்ட போக்குவரத்து காவலர் மணிகண்டன் உடனடியாக வழிகாட்டி பலகையை சரி செய்தார்.
அவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

News March 29, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர் கவுசிக் இவர்கள் இருவரும் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலம் அருகே சாலையில் எதிர் திசையில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 29, 2024

10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம்

image

செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ‘ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்’ உள்ளது.கோடை விடுமுறை துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் விதமாக, புதிய ‘டிஸ்கோ’ போட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட ‘டிஸ்கோ’ போட்டில் சவாரி செய்ய, 10 நிமிடத்திற்கு ரூ.2,400 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!