India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 88,328 மாணவர்கள் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். 274 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,4 மையங்கள் தனித் தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 123 பறக்கும் படைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. போக்குவரத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில், 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 141 என மொத்தம் 239 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பிளஸ் 2 பயிலும் 14,861 மாணவியர், 13,091 மாணவர்கள் என, மொத்தம் 27,952 பேர், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 வகுப்பு பயிலும் 15,722 மாணவியர், 14,146 மாணவர்கள் என, மொத்தம் 29,868 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ALL THE BEST.
பெருங்களத்தூர் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா, பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முந்தினம் (பிப்.28) இவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஷ்வாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோஷ்வா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் இந்த கோயிலுக்கு பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியா பத்துமலை முருகனும் காட்சி அளிக்கிறார். இங்கு குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்யப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி கனவில் தோன்றிய முருகன், இங்கு கோவில் எழுப்ப வேண்டும் என்று சொன்னதன் அடிப்படையில் மலை உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்ய தொடங்கினர்.
பெருங்களத்தூர் வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர், பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஷ்வாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோஷ்வா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், புவனேஸ்வரி அம்மன் நகர் MGR தெருவில் கமலஹாசன் (35) – ரம்யா (32) தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமான 8 மாதத்தில், 4 மாத கர்ப்பிணியான ரம்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மமான முறையில் நேற்று (பிப்.28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. காசி அலிசன் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 20ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்புரையாற்றினர். இந்த புத்தகத்திருவிழா நேற்றுடன் (பிப்.28) நிறைவுபெற்றது.
சமூக வலைத்தளங்களில் தினமும் பல்வேறு வகையில் பணமோசடிகள் அரங்கேறி வருகிறது. காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தான் வந்து கொண்டு இருக்கின்றனர். “மோசடிகள் பல வழிகளில் நடைபெறுகின்றன. எனவே, நாம் விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருப்போம்” என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.