India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரனூர் சுங்கச்சாவடியில் ஆயுத பூஜை மற்றும் வார இறுதிநாட்கள் என் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக போலீசார் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருதி இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. அருள் இவர் திண்டிவனம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழைய பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம் .ஆர் அங்கயர் கன்னி, மதுராந்தகம் கல்வி மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில், செங்கல்பட்டு மாவட்டம் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று பல்வேறு போட்டிகளில் வென்று செங்கல்பட்டு மாவட்டம் பதக்கபட்டியலில் முன்னேறியது. செங்கல்பட்டு – 6 தங்கம், 1 வெள்ளியுடன் முதலிடத்தில், சென்னை – 9 தங்கம், 2 வெள்ளி, 9 வெண்கலத்துடன் முதல் இடத்திலும் உள்ளன.
தமிழக முழுவதும் 18 மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் பதவி காலியிடமாக இருந்தது. இந்நிலையில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கே. ஜெய்சங்கர், செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்க கொடி, பெயர் பலகையை நிர்வாகம் ஒப்படைக்கவும், வேலை மறுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை மீண்டும் பணிக்கு எடுக்கவும், குறைந்த பட்ச ஊதியம் ரூ20,000 வழங்கவும் கோரி நேற்று உயிரியல் பூங்கா நுழைவு வாயில் அருகில் உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்க தலைவர் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள தாய் சேய் நல பிரிவு பார்வையாளர்கள் தங்கும் கட்டிடத்தினை இன்று மாலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த வீ.அறிவுடைநம்பி, ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் கோட்டாட்சியராக இருந்த சே.காஜா சாகுல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை மாற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஒழலூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (45), அதேப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஏரியில் பணம் கொடுத்து தாமரை பூ பறித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விமல் ராஜ் (28), குகன் (35), சுதாகர் (42) ஆகியோர் ஏரியில் பூ பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகராறில் அண்ணாதுரை கையில் வெட்டிவிட்டு விமல்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திமுக சார்பில் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க, மாநில நிர்வாகிகளை தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பல்லாவரம் தொகுதிக்கு – ரத்னா லோகேஸ்வரன், தாம்பரம் தொகுதிக்கு – கே.எஸ்.ரவிச்சந்திரன், செங்கல்பட்டு தொகுதிக்கு – பிரபு கஜேந்திரன், திருப்போரூர் தொகுதிக்கு – சி.தசரதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.