Chengalpattu

News March 14, 2025

கிராமசபை கூட்ட தேதியில் மாற்றம்

image

வரும் மார்ச் 22 உலக தண்ணீர் தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற இருந்தது. சில நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 22 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் மார்ச் 23 அன்று மாற்றப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அலுவலக அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 23 ஞாயிற்று கிழமையில் வருவதால் பலரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.

News March 14, 2025

செங்கல்பட்டில் பாம்பு கடித்து ஆண்டுக்கு 33 பேர் பலி

image

அதிக விஷத் தன்மை கொண்ட பாம்புகள் கடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ரத்தம் உறைதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இதற்காக பாம்பு கடிக்கு என தனியாக நச்சு நீக்கி சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், கடந்தாண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 536 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் 503 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்;33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

News March 13, 2025

கண் பிரச்னைகள் தீர்க்கும் வீரவரநாதர்

image

செங்கல்பட்டு: கிணார் என்ற கிராமத்தில் கம்பாநாயகி சமேத வீரவரநாதர் என்கிற நேத்ரபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது திருக்கண்ணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சுக்ரனுக்கு பரிகார ஸ்தலமாகும். இங்குள்ள ஈசனை வழிபட்டால் கண் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பதும் ஐதீகம். இத்தலத்து வீரவரநாதரை வெள்ளிக் கிழமைகளில் வழிபட திருமணத் தடைகள் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <>விண்ணப்பியுங்கள்<<>>.ஷேர்

News March 13, 2025

விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது கட்டாயம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசின் மானியங்கள் பெற, விவசாய நிலங்கள் விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென, வேளாண்மைத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 13, 2025

மாமல்லபுர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாசிமக மாமல்லபுரத்தில் பௌர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் 5,000-கும் மேற்பட்ட குடில்கள் அமைத்து குவிந்துள்ள இருளர் பழங்குடி இன மக்கள்.மாசிமக பௌர்ணமி அன்று அவர்களுடைய குலதெய்வமான கன்னியம்மன் கடலில் எழுந்து அருள் பாலிப்பதாக நம்புகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக குடில்கள் அமைத்து தங்கி வரும் மக்கள், இன்று (மார்ச்.13) அதிகாலை முதல் கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.

News March 13, 2025

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா

image

தாம்பரம் அருகே கார் ஓட்டுநரின் மகள் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அவரின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்,அதே தெருவில் உள்ள அவரது பெரியப்பா வீட்டிற்கு சென்று, வீட்டுப்பாடங்கள் செய்து வந்தார்.கடந்த 8ம் தேதி, சிறுமி பள்ளி முடிந்து பெரியப்பா வீட்டிற்கு சென்ற போது அவளது பெரியப்பா சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்து அவரை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 12, 2025

பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்த எலக்ட்ரீசியன் கைது

image

கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது நந்திவரம் கூடுவாஞ்சேரி மகேஸ்வரி நகரைச் சார்ந்த எலெக்ட்ரிசியன் ரவி (42) அந்தச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரவியைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். 

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை <>கிடைக்கும்<<>>.

News March 12, 2025

மழைக்கு ஒதுங்கிய மூவர் மீது பேருந்து மோதியது

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில், நேற்று (மார்.11) மதியம் மழை விட்டுவிட்டு பெய்தது. அப்போது, பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம் நோக்கி பைக்குகளில் வந்தவர்கள், இரும்புலியூரில் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். மழை விட்டதும் புறப்பட தயாராகிபோது, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.

error: Content is protected !!