India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு காவல்துறை மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம், அருகிலுள்ள காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் ஒரு அவசர SOS பொத்தான் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை-9) வெளியிட்டுள்ளது. நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட உடனடியாக அழைக்கவும். பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் ☎️ 1091 அல்லது ☎️ 181.
அல்லது அழைக்கவும் அவசர உதவி எண் ☎️100.
வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், செங்கல்பட்டில் மட்டும் 41 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் <<17002061>>தொடர்ச்சி<<>>
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், நேரடி மாணவர் சேர்க்கை ஜூன் 23-ந்தேதி முதல் வரும் ஜூலை 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இச்சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 9499055673, 9962986696 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செங்கல்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14-வயது சிறுவனை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த அமீது அப்துல்காதர் (21), என்பவர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அப்துல்காதர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் (ம) ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கபட்டது.
செங்கல்பட்டு இன்று (08/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள.
சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.