Chengalpattu

News April 3, 2024

செங்கல்பட்டு அருகே கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புஷ்பலதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்து ரூ.2,26,87,900 ரூபாயை பறிமுதல் செய்தனர். வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட அந்த பணம் செங்கல்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 3, 2024

செங்கல்பட்டு:திமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது புகார்?

image

சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளராகவும் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் இருப்பவர் ஏழுமலை. இவர் மீது சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பெண் தலைவர்கள் பலர் ஒன்றினைந்து அடுக்கடுக்கான புகார்களை அரசு முக்கிய அலுவலர்களுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அதில் அரசு முக்கிய திட்டங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு வேண்டியவர்கள் மூலம் அதில் ஊழல் புரிவதாக புகார் அளித்துள்ளனர்.

News April 2, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 23.82 லட்சம் வாக்காளர்கள்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 11லட்சத்து 80 ஆயிரத்து 263 ஆண்‌ வாக்காளர்களும் , 12 லட்சத்து 01 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்களும் , 429 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23,82,119 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

News April 2, 2024

ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் 

image

செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் அருகே தேரடி தெருவில் வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ரகசியமாக வீட்டில் மதுபானம் விற்ற சுலோச்சனா (65) என்பவரை நேற்று (ஏப்-1) கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

வீடு புகுந்து 9 சவரன் நகை திருட்டு

image

பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன. இவர் வயலுக்குச் சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

News April 2, 2024

ரூ.5.8 லட்சம் நகைகள் திருட்டு: 2 போ் கைது

image

மதுராந்தகம் அடுத்த விழுதமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கே.நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த நவீன்(25), வெங்கடேசன்(28) ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளையும், 500 கிராம் வெள்ளி பொருள்களை மீட்டனர்.

News April 2, 2024

185 விளம்பர பேனர்கள் அகற்றம்

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்கும் விதமாக ஐந்து மண்டலங்களிலும், கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள், 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள், அகற்றினர்.

News April 1, 2024

செங்கல்பட்டு: நரிக்குறவ பெண்களின் அவல நிலை

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பின்புறம் உள்ள நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் அவற்றை செய்து தரக் கோரி 100 க்கும் மேற்பட்டோர் இன்று மனு அளிக்க வந்தனர்.  மாவட்ட ஆட்சியரை சந்திக்க இயலாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். 

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

பாலாற்றில் பண்டைய கால நாணயங்கள்  கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் ஆய்வுசெய்த போது ராஜராஜ சோழன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த வட்ட வடிவ செப்பு நாணயம் கிடைத்துள்ளது.
தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதே முத்திரை அமைப்புடன் உள்ளது. நாணயத்தின் முன்புறம் மன்னர் நின்றவாறும், பின்புறம் அமர்ந்தவாறும் உள்ளார்.
உலோக நாணயத்தில், முன்புறம் துதிக்கை துாக்கி பிளிறும் யானை, பின்புறம் உஜ்ஜயினி ஸ்ரீவத்சம் எழுத்து சின்னம் உள்ளது.

error: Content is protected !!