Chengalpattu

News April 6, 2024

மாமல்லையில் புதிதாக அலங்கரிக்கும் சுதை சிற்பங்கள்

image

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் ‘அர்பன் ஹட்’ எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகம் மாமல்லபுரத்தில் உள்ளது.வாயிலில் பயணியரை வரவேற்கும் கரக நாட்டியக் கலைஞர்கள், வளாகத்தில் இளைஞர்கள் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, ஏரில் பூட்டப்பட்ட மாடுகள், மாட்டு வண்டி, மான்கள், கொக்குகள் ஆகிய சுதை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

News April 5, 2024

செங்கல்பட்டு அருகே 4 பேர் கைது

image

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் கமல் குமார், நவ்நீத் மற்றும் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி முடிந்து அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த 4 பேர், நவ்நீத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கேளம்பாக்கம் மணிகண்டனை (27) கைது செய்த நிலையில், நேற்று 3 சிறுவர்களை கைது செய்தனர்.

News April 5, 2024

ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம்

image

கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஏப்.15 நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதாக  புதுப்பட்டினம், வாயலுார், உய்யாலிகுப்பம், கடலுார் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

செங்கல்பட்டு: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News April 3, 2024

சித்தாமூர் ஒன்றிய தலைவர் மீது புகார்

image

சித்தாமூர் ஒன்றியத்தில்,43 ஊராட்சிகள் உள்ளன.17 ஆண் ஊராட்சி தலைவர்கள், 26 பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். ஒன்றிய செயலர் ஏழுமலை, ஒன்றியத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சித்தாமூர் ஒன்றியத் தலைவர் ஏழுமலை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என, மனு அனுப்பப்பட்டுள்ளது.

News April 3, 2024

பாலூர் – கண்டிகை சாலையில் நேரக் கட்டுப்பாடு

image

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி ரயில்வே கேட் அருகில் கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி காலை 8 – 10, மாலை 4 – 5.30 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்

News April 3, 2024

ஓட்டளித்தால் உணவகங்களில் தள்ளுபடி

image

தமிழகத்தில் வரும் 19ந்தேதி நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் 100 % வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள உணவகங்களில் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை காட்டி சாப்பிடும் உணவகங்களில் 5% தள்ளுபடி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.ஆட்சியரின் அறிவிப்பிற்கு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்

News April 3, 2024

செங்கல்பட்டு அருகே தீயில் உடல் கருகி பெண் பலி

image

செங்கல்பட்டு அருகே வேன்பாக்கம் பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் மலர் (39) என்கிற பெண் உடல் கருகி உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேதத்தை மீட்டே உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!