Chengalpattu

News April 12, 2024

செங்கல்பட்டில் வாகன ஓட்டிகள் அவதி

image

சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தினமும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே கேட் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் பழுதடைந்து,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 12, 2024

திருப்போரூர்: ஆர்வம் காட்டும் முதியோர்

image

மக்களவை தேர்தலில் 85வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 40 சதவீதத்திற்கு உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு அளிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர் 231 பேர், மாற்றுத்திறனாளிகள் 220 பேர் என, 451 பேர் உள்ளனர். அவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி, நடைபெற்ற வருகிறது.

News April 11, 2024

கல் குவாரி லாரிகளால் ஆபத்து

image

செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத்துார் , ஓணம்பாக்கம் , நெல்வாய்பாளையம் , ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கல் குவாரிகள் செயல்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து, லாரிகள் வாயிலாக அதிகபடியான பாரங்கள் ஏற்றிச்செல்வது , சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

News April 11, 2024

மது பாட்டில்கள் விற்பனை செய்தவருக்கு போலீசார் வலை

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போது தப்பியோடினார். இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 43 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

News April 11, 2024

வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.15.23 லட்சம் காணிக்கை

image

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவிலில் உள்ள 10 பொது உண்டியல்களில் 12 லட்சத்து 84,394 ரூபாயும், இரண்டு திருப்பணி உண்டியல்களில் 2 லட்சத்து 39,049 ரூபாயும், தங்கம் 51 கிராம், வெள்ளி 472 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

News April 11, 2024

வேட்பாளர்கள் பெயர்கள் சின்னங்கள் பொருத்தும் பணி

image

திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன்,அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News April 10, 2024

செங்கல்பட்டு: 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

image

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தை சுற்றியுள்ள ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்டு தப்பியோடினர். அதேபோன்று சிங்கப்பெருமாள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2024

காஸ் சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.

News April 10, 2024

பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை

image

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
சோதனையின் போது கார், வேன், டெம்போ என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பணம், பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதித்தனர்.

News April 9, 2024

ட்ரோன்களில் மருந்து சப்ளை அரசு மருத்துவமனை அசத்தல்

image

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனை வாயிலாக ட்ரோன்களில் மருந்து சப்ளை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு சுமார் 200 அடி உயரத்தில் பறந்து 25 நிமிடத்தில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு ட்ரோன் வந்து சேர்ந்தது. இதில் 50 கிலோ மருந்துகள் வரை கொண்டு செல்லலாம்.

error: Content is protected !!