Chengalpattu

News April 16, 2024

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

image

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சியில் உள்ள தர்காஸ், தாசரிகுப்பம், சந்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 15, 2024

செங்கல்பட்டு: பயங்கர தீ விபத்து 

image

திருப்போரூர் பேருராட்சி குப்பை கிடங்கில் இன்று (ஏப்ரல்-15) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கு தீ விபத்து குறித்து தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

News April 15, 2024

தீ தொண்டு வாரத்தையொட்டி தீ தடுப்பு விழிப்புணர்வு

image

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மதுராந்தகம் தீ மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் திருமலை தலைமையில் தீ தடுப்பு குறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பணியாற்றும் ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

News April 15, 2024

மின்சாரம் தாக்கியதில் பெண் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகள் யஸ்விணி. இவர் நேற்று வீட்டின் வெளியே இருந்த கம்பி வேலியில் துணி காய வைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். கூவத்தூர் போலீசார் யஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2024

தேர்தலில் வாக்களித்தால் உணவகங்களில் 5% தள்ளுபடி

image

ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

அமைச்சர் அன்பரசன் தலைமையில் கூட்டம்

image

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல்-14) நடைபெற்றது அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி, ராஜா, கருணாநிதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்,

News April 14, 2024

பாஜக பிரமுகருக்கு சம்மன்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி ஏப்.6 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சதீஷ், நவீன்,பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் ரூ.1 கோடி கைமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தொழிற்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.

News April 13, 2024

25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

image

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட முருக்கங்காடு பகுதியில், 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித வசதிகளையும் நிறைவேற்றாமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கும், இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக,அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2024

கஞ்சாவுடன் சுற்றி திரிந்த இளைஞர் கைது

image

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றி திரிந்த பார்த்திபன்(26) என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 12, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து 6 பேர் காயம்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (ஏப்.12) சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!