Chengalpattu

News April 19, 2024

செங்கல்பட்டு அருகே பிரபல நடிகை 

image

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களித்த பின் தனது கையில் வைக்கப்பட்ட அடையாள மை காட்டினார்.

பின்னர் ரம்யா பாண்டியனுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.

News April 18, 2024

தாம்பரம்: பொதுமக்கள் தவிப்பு

image

தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ஆவடி, திருபெருமந்தூர் செல்ல அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரணம் சேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களால் பொது மக்களுக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

News April 18, 2024

வண்டலூர் பூங்கா நாளை விடுமுறை

image

தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான நாளை அனைவரும் ஓட்டளிக்க வசதியாக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்திற்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News April 18, 2024

இன்று ஒரு நாள் இலவசம்

image

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News April 17, 2024

செங்கல்பட்டு: பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகப்பன்(37) என்பவரை தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(ஏப்.16) குற்றவாளி நாகப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புளித்தது.

News April 17, 2024

செங்கல்பட்டு: சாத்துக்குடி பழங்களில் பிரமாண்ட மாலை

image

செங்கல்பட்டு மாவட்டம் குண்டூர் பகுதியில், இன்று(ஏப்.17) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கிரேன் மூலம் ராஜசேகருக்கு சாத்துக்குடி பழங்களாலான ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செயலாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 17, 2024

திருப்போரூர்: அமைச்சர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்போரூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். உடன் திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News April 16, 2024

திருக்கழுக்குன்றம்: 63 நாயன்மார்கள் வீதி உலா

image

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாவது நாள் இன்று 63 நாயன்மார்கள் நான்கு மாத வீதியில் வீதி உலா வந்து கிரிவலப் பாதையை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பொதுமக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

News April 16, 2024

செங்கல்பட்டு: வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதியில் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

நாளை முதல் 10124 சிறப்பு பேருந்துகள்

image

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 17 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 18 ஆம் தேதியில் 10124 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!